உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

திருக்குறள்

தமிழ் மரபுரை






வதிகாரத்திற் கணவனை அன்பிலியாகக் கூறியிருப்பதெல்லாம், பெண் பாலின் மென்மையும் மடமையும்பற்றிய உயர்வுநவிற்சியே என அறிந்து கொள்க.

அதி. 121- நினைந்தவர் புலம்பல்

அதாவது, முன் கூடிப்பெற்ற இன்பத்தால் ஒருவரையொருவர் நினைந்து தலைமகள் தன் இல்லத்திலும் தலைமகன் தொலைவான அயலிடத்திலும் தனித்தனி கூற்று நிகழ்த்துதல். இஃது இருவர்க்கும் பொதுவாதலாற் பலர் பாலாற் கூறப்பட்டது; தலைமகள் தன்கண்ணதாகக் கருதிய படர்மிகுதியின் தொடர்ச்சியாதலின், தனிப்படர் மிகுதியின் பின் வைக்கப்பட்டது.

1201. உள்ளினுந் தீராப் பெருமகிழ் செ-தலாற் கள்ளினுங் காம மினிது.

(தூதா-ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது.)

(இ-ரை.) உள்ளினும் தீராப் பெருமகிழ் செ-தலால் - முன்பு கூடி நுகர்ந்த இன்பத்தைப் பின்பு பிரிந்தவிடத்து நினைத்தாலும் அன்றே பெற்றாற்போல நீங்காத பெருமகிழ்ச்சியைத் தருதலால்; கள்ளினும் காமம் இனிது - உண்ட விடத்தல்லது மகிழ்ச்சி செ-யாத கள்ளினுங் காமம் இன்பந்தருவதா யுள்ளது.

தலைமகளை மறவாமை கூறியவாறு. முன்பு கண்டார் மகிழ்செ-யும் (குறள். 1090) என்ற காமம் இங்குக் கருதினாலும் மகிழ்செ-யும் என்று கூறப்பட்டது.

1202.

எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன் றில்.

(இதுவுமது.)

(இ-ரை.) தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல் - தம்மாற் காத லிக்கப்படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந் நினைத்தவர்க்குப் பிரி வினால் வரக்கூடிய துன்பமொன்றும் இல்லாமற் போ-விடுகின்றது; காமம் எனைத்து

இனிது ஒன்றே காண் அதனாற் காமம் எத்துணையேனும் இன்பந் தருவதொன்றே காண்.