உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

திருக்குறள்

தமிழ் மரபுரை





78

1223.

திருக்குறள்

தமிழ் மரபுரை

பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித் துன்பம் வளர வரும்.

(ஆற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.)

(இ-ரை) பனி அரும்பிப் பைதல் கொள் மாலை - காதலரோடு கூடியிருந்த நாளெல்லாம் குளிர்ச்சி தோன்றிப் பசந்துவந்த மாலை; துனி அரும்பித் துன்பம் வளர வரும் – இந்நாளில் எனக்கு உயிர்வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றித் துன்பம் மேன்மேலும் வளருமாறு வருகின்றது.

'பனியரும்பிப் பைதல்கொள்' என்னுந் தொடர், நடுக்கங்கொண்டு துன்பப்பட என்றொரு குறிப்புப் பொருளுந் தோன்றநின்றது.

1224. க காதல ரில்வழி மாலை கொலைக்களத் தேதிலர் போல வரும்.

(இதுவுமது.)

(இ-ரை) மாலை - காதலர் உடனிருந்த நாளெல்லாம் என் உயிர் தளிர்ப்புற வந்தமாலை; காதலர் இல் வழி அவர் நீங்கியவிடத்து; கொலைக்களத்து ஏதிலர் போல வரும் - கொலைக்களத்திற் கொலைஞர் வருவது போல என்னுயிரைக் கவர வரும்.

இதனால் நான் ஆற்றுமா றெங்ஙனம் என்பது குறிப்பெச்சம். ஏதிலர் ஏதும் அன்பிலாதவர்.

1225.

காலைக்குச் செ-தநன் றென்கொ லெவன்கொல்யான் மாலைக்குச் செ-த பகை.

(இதுவுமது.)

(இ-ரை.) (காலையும் மாலையும் காதலர் உடனிருந்த நாள் போலாது இன்று நேர்மாறான இயல்பு கொண்டுள்ளன. அவற்றுள்) யான் காலைக்குச் செ -த நன்று என் - நான் காலைப் பொழுதிற்குச் செ-த நன்கு யாது? மாலைக்குச் செ-த பகை எவன் - மாலைப் பொழுதிற்குச் செ-த தீங்கு யாது?

முன்பெல்லாம் நடுங்கத்தக்க பிரிவச்சம் உண்டுபண்ணிய காலை, இன்று அஃதொழிந்து, இராவென்னும் துன்பக் கடலைக் கடந்தேறும் கரையாக மாறிற்று