உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ன்பத்துப்பால் - கற்பியல் - பொழுதுகண்டிரங்கல்

79

து

என்னுங் கருத்தால் 'நன்றென் கொல்' என்றும், முன்னாளில் எல்லை யில்லா இன்பஞ் செ-து வந்த மாலை இன்று இறந்துபடுமளவு துன்பஞ் செ- கின்ற தென்னுங் கருத்தால் ‘பகை யெவன்கொல்' என்றும் கூறினாள். 'கொல்' ஈரிடத்தும் அசைநிலை. 'பகை' ஆகுபொருளி.

1226.

மாலைநோ- செ-தன் மணந்தா ரகலாத காலை யறிந்த திலேன்.

(இன்று இங்ஙனமாகின்ற நீ அவர் பிரிவிற் குடம்பட்ட தெங்ஙனம் என்ற தோழிக்குச் சொல்லியது.)

(இ-ரை) மாலை நோ- செ-தல் - முன்பெல்லாம் எனக்கு இன்பஞ் செ-து வந்த மாலை, அதற்கு நேர்மாறாக இன்று துன்பஞ் செ-யு மென்பதை; மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன் - காதலர் பிரிவிற்கு முன் நான் அறியவே யில்லை.

அறிந்திருந்தேனாயின் அவர் பிரிவிற்கு உடம்பட்டிரேன் என்பதாம்.

1227. காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோ-.

(மாலைப்பொழுதில் நீ இங்ஙனமாதற்குக் கரணியம்

என்ன என்ற தோழிக்குச் சொல்லியது.)

(இ-ரை.) இந் நோ- - இக் காமநோயாகிய பூ; காலை அரும்பி – காலைப் பொழுதில் மொக்கு விட்டு; பகல் எல்லாம் போது ஆகி பகற்கால மெல்லாம் பேரரும்பாக முதிர்ந்து; மாலை மலரும் - மாலைப்பொழுதில் மலராக விரியும்.

படுக்கைவிட் டெழுந்த பொழுதாகலின் கனவில் நிகழ்ந்த கூட்டம் நினைந்தாற்றுதல்பற்றிக் 'காலை யரும்பி' யென்றும், பின்பு பொழுது செல்லச் செல்ல அதை மறந்து பிரிவை நினைத்து ஆற்றாளாதல்பற்றிப் ‘பகலெல்லாம் போதாகி' யென்றும், பகல் முடிவில் மக்களும் விலங்கு பறவைகளும் தத்தம் துணையொடு அல்லது துணையை நினைந்து உறைவிடம் திரும்புவது கண்டு, முன்பு தான் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதலின் 'மாலை மலரும்' என்றும், கூறினாள். நோயைப் பூவாக உருவகியாமையின் ஒருமருங் குருவகம்.