உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

திருக்குறள்

தமிழ் மரபுரை






1228.

அழல்போலு மாலைக்குத் தூதாகி யாயன் குழல்போலுங் கொல்லும் படை.

(இ-ரை) ஆயன் குழல்

(இதுவுமது.)

முன்னெல்லாம் இனிதா- ஒலித்த இடையன்

புல்லாங்குழல்; அழல் போலும் மாலைக்குத் தூதாகி - இதுபோது தீப்போலச் சுடும் மாலைப்பொழுதிற்கு முன் தூதாக வந்து; கொல்லும் படை – என்னைக் கொல்வது போலத் துன்புறுத்தும் படைக்கலமு மாயிற்று.

முன்னரே வருகை யுணர்த்தலின் முன் தூதாயிற்று; கொல்லுந் தொழிலாற் படைக்கலமாயிற்று. தானே எரிக்கவல்ல மாலை இத்துணைக் கருவிகளையும் பெற்றால் என்னதான் செ-யா தென்பதாம். பின்னின்ற 'போலும்' உரையசை.

இனி, ஆயன் குழல்போலுங் கொல்லும் படை மாலைக்குத் தூதாகி அழல்போலும் என்றுமாம்.

1229.

பதிமருண்டு பைத லுழக்கு மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து.

(இதுவுமது.)

(இ-ரை.) (இதற்கு முன்பு நானே மதிமயங்கி நோ-த்துன்புற்றேன்.) மதி மருண்டு மாலை படர் தரும் போழ்து இன்று, கண்டாரெல்லாரும் மதிமயங்கும் வகை மாலை வரும்பொழுது; பதி மருண்டு பைதல் உழக்கும் இந் நகர் முழுதும் மயங்கி நோ-த் துன்புறும்.

மதி மருள என்பது 'மதி மருண்டு' எனத் திரிந்து நின்றது. பதி முழுதும் துன்புறுவதால் யான் இறந்துபடுவேன் என்பதாம். மாலை மயங்கி வரும் போழ்து என் பதி நிலைகலங்கி நோயுழக்கும் என்றுரைப்பார் மணக்குடவ பரிப்பெருமாளர்.

1230.

பொருண்மாலை யாளரை யுள்ளி மருண்மாலை மாயுமென் மாயா வுயிர்.

(இதுவுமது.)

(இ-ரை.) மாயா என் உயிர் - இதுவரை காதலர் பிரிவைப் பொறுத்து இறந்துபடாதிருந்த என் உயிர்; பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை மாயும் – இன்று பொருளியல்பையே தமக்கு இயல்பாகவுடையவரை நினைந்து இம் மயங்கும் மாலைப் பொழுதில் இறந்துபடுவதாகும்.