உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துப்பால் கற்பியல் - நெஞ்சொடு கிளைத்தல்

85

வன்மைக் கேலாத மென்மையையும் ஒப்புநோக்கி வெட்கிப் போயிற்றென் பதாம். இங்ஙனம் அவளுறுப்புகள் ஒன்றினொன்று முற்பட்டு நலனழியும். ஆதலால், யாம் விரைந்து சென்று அவளை யடைதல் வேண்டுமென்பது கருத்து.

அதி. 125 - நெஞ்சொடு கிளத்தல்

அதாவது, ஆற்றாமை மீதூரத் தனக்கொரு பற்றுக்கோடு காணாத தலை மகள், செ-வதறியாது தன் நெஞ்சொடு பலவாறு சொல்லுதல். இது உறுப்புகள் தம் அழகிழந்தவிடத்து நிகழ்வதாகலின், உறுப்புநலனழிதலின் பின் வைக்கப்

பட்டது.

1241. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சேயெனைத்தொன்று மெவ்வநோ- தீர்க்கு மருந்து.

(தன் ஆற்றாமை தீருந் திறம் நாடியது.)

(இ-ரை.) நெஞ்சே என் உள்ளமே! எவ்வ நோ- தீர்க்கும் மருந்து ஒன்று இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்தாவதொன்றை; எனைத்து ஒன்றும் நினைத்துச் சொல்லாயோ - எத்தன்மைய தாயினும் ஒரு முறையை எண்ணி எனக்குச் சொல்லமாட்டாயா?

பொதுவான மருந்தினால் தீரும் உடல்நோயன்றென்பாள் ‘எவ்வநோ-' என்றும், கற்புத் தவிர எதையும் இழக்கும் மருத்துவ முறையாயினும் என்பாள் ‘எனைத்தொன்றும்' என்றும் கூறினாள்.

1242. காத லவரில ராகநீ நோவது

பேதைமை வாழியென் னெஞ்சு.

(தலைமகனைக் காணும் வேட்கை மிகுதியாற் சொல்லியது.)

(இ-ரை.) என் நெஞ்சு வாழி என் உள்ளமே நீ வாழ்வாயாக! அவர் காதல் இலராக நீ நோவது – அவர் நம்பாற் காதலில்லாதவராகவும் நீ யவர் வரவு நோக்கி வருந்துவது; பேதைமை - உன் பேதைமையின் விளைவே யன்றிப் பிறிதன்று.

விரைந்து மீளாமையானும் நம்பால் தூதுவிடாமையானும் அவர் நம்மை நினையாமை வெளியாகின்றது. இந்நிலையில் நீ அவர்பாற் செல்லாது அவர்