உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

திருக்குறள்

தமிழ் மரபுரை






வரவுநோக்கி வருந்துகின்றா-. இது உன் அறியாமை என்னுங் கருத்தாற் ‘பேதைமை' யென்றாள். 'வாழி' இகழ்ச்சிக்குறிப்பு.

1243. இருந்துள்ளி யென்பரித னெஞ்சே பரிந்துள்ளல் பைதனோ- செ-தார்க ணில்.

(இதுவுமது.)

(இ-ரை.) நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என் என் உள்ளமே! நீ அவர்பாற் செல்வதுஞ் செ-யாது இறந்துபடுவதுஞ் செ-யாது, இங்கிருந்து கொண்டு அவர் வரவு நினைந்து வீணாக வருந்துவது ஏன்? பைதல் நோ- செ-தார்கண் பரிந்து உள்ளல் இல் இத் துன்ப நோயை உண்டாக்கிய வரிடத்துத்தான் நம்மை அன்பாக நினைந்து நம்மிடம் வரக் கருதுதல் இல்லையே?

நம்பால் அருளிலராகலின் தாமாக வரார். நாம்தான் அவரிடத்துச் செல்ல வேண்டும் என்பதாம்.

1244.

கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத் தின்னு மவர்க்காண லுற்று.

(இதுவுமது.)

(இ-ரை.) நெஞ்சே கண்ணும் கொளச் சேறி என் உள்ளமே நீ என் காதலர்பாற் செல்லலுற்றாயாயின், இக் கண்களையும் உடன் கொண்டுசெல்; இவை அவர்க் காணல் உற்று என்னைத் தின்னும் - ஏனெனின், நீ தனியா-ச் செல்வாயாயின் இவை அவரைக் காண வேண்டுமென்னும் பேராவலினால், அவரைக் காட்டச் சொல்லி. என்னைப் பி-த்துத் தின்றுவிடும்.

தின்னுதல் என்பது தின்பதுபோலத் தொந்தரவு செ-தல்; ஆகுவினை; கொண்டு என்பது 'கொள்' எனத் திரிந்து நின்றது. காதலரிருக்குமிடஞ் சென்று அவரை சை தீரக் காணவேண்டுமென்பதாம்.

1245.

செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயா முற்றா லுறாஅ தவர்.

(இதுவுமது.)

(இ-ரை.) நெஞ்சே - என் உள்ளமே! யாம் உற்றால் உறாதவர் - யாம் அவர் பால் அன்புகொண்டாலும் தாம் எம்பால் அன்புகொள்ளாத நம் காதலரை;; செற்றார்