உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைச்சொல்லாக்க நெறிமுறைகள்

எ-கா : ஈப்புலி, கரடிகை, பெருச்சாளி, மணிப்பவளம். cf. Lens, so called from its likeness to a lentil seed. ஒப்புமை ஏதேனும் ஓர் இயல்புபற்றி இருக்கலாம்.

எ-கா: தோணிப்பாலம், ஆமைவடை.

107

இவற்றில், தோணி ஆமை என்னும் பெயர்கள் முறையே concave, convex, என்னும் பொருள்படல் காண்க.

10. ஓரினப் பொருள்களை, அவற்றின் நன்மையும் தீமையும் பிற தன்மையும் குறித்த அடைகளைப் பொதுப்பெயருடன் சேர்த்துப் பிரித்துக் கூறலாம்.

எ-கா :நல்துளசி, நாய்த்துளசி.

நன்செய், புன்செய்.

கரும்பு, பேய்க்கரும்பு.

கடலை கொண்டைக் கடலை, வேர்க்கடலை,

பட்டாணிக் கடலை.

11. ஓரினப் பொருள்களைக் குறிக்க ஒருபொருட் சொற்களையும் பயன்படுத்தலாம்.

6 எ-கா : காற்று

=

wind, வளி = gas. f

ஆங்கிலச் சொற்களை யொத்த தமிழ்ப் போலியொலிகள், ஆங் கிலத்தோடொத்த பொருள்தரின் கொள்ளப்படலாம்.

எ-கா : parliament - பாராளுமன்று.

bracket - பிறைக்கோடு.

12. ஆங்கிலச் சொற்களின் வேர்ப்பொருளை யறிந்து அதற்கேற்ப மொழிபெயர்க்கலாம்.

எ-கா :

colemn-பிழம்பு.

colonel, (the leader of a column of soldiers) பிழம்பர்.

phenamenon (an appearance) - தோற்றரவு.

'அம்' ஈறுபெற்ற தோற்றம் என்னும் சொல் பொதுவான தோற்றத்தைக் குறிக்க வழங்குதலின், ‘அரவு' ஈறுபெற்ற தோற்றரவு என்னும் சொல் ஒரு விதப்புத் தோற்றத்தைக் குறித்தற் கேற்றதாதல் காண்க.

13. சில ஆங்கிலச் சொற்களுக்குச் செம்மொழிபெயர்ப்புச் (literal) செய்துகொள்ளலாம்.

எ-கா : inspect - உண்ணோக்கு. inspection - உண்ணோக்கம்.

inspector - உண்ணோக்காளர்.