உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

உலக மொழிகளின் தொடர்பு

உலக மாந்தரெல்லாம் ஒரு தாய் வழியினர் என்பது மாந்தனூலால் தெரியவருவதால், அவர் வழங்கிவரும் பல்வேறு மொழிகளும் ஒரு தாய்வழியினவாய்த்தா னிருத்தல்வேண்டும். ஆயினும், மாந்தன் தோன்றிய குமரிநாட்டினின்று, முதற்றாய்மொழி வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் மக்கள் பல்வேறு திசையிலுள்ள பல்வேறிடங்கட்குப் பிரிந்துபோனதனால், இடத்தாலும் காலத்தாலும் நெட்டிடைப்படப் பிரிந்துபோன அம் மக்களின் மொழிகள் பல்வேறு வகைகளில் வளர்ந்து திரிந்து மூலமொழியின் வேறு பட்டும் மாறுபட்டும் உள்ளன. ஆயினும், ஆய்ந்து நோக்கின், உலகமொழி கட்கெல்லாம் மூல நிலையான ஒரு மொழி உண்டென்பது புலனாகும்.

எல்லா மொழிகட்கும், முதலாவது மரபியல் (Geneology), வடிவியல் (Morphology) என்னும் இருவகையில் உறவு காணலாம்.

மரபியலாவது, பாட்டனும் தந்தையும் மகனும் பேரனும் போல, அல்லது அடியுங் கவையும் கொம்புங் கிளையும்போல, ஒன்றினொன்று பிறந்தும் கிளைத்தும் வரும் தொடர்ச்சி பற்றியது. மேனாட்டில் ஆரிய செருமானிய ஆங்கில மொழிகளும், கீழ்நாட்டில் தமிழ் கன்னட படக மொழிகளும் இத் தொடர்பிற் கெடுத்துக்காட்டாம். குணங்குறிகளிற் பெற்றோர்க்கும் பிள்ளைகட்குமுள்ள ஒப்புமைபோல, சொன்னிலையிலும் சொல்லாக்க நெறிமுறையிலும் மரபியலுறவுற்ற மொழிகளிடை ஒப்புமை யுண்டு.

வடிவியலாவது, குழவி நிலையும் பிள்ளைமையும் இளமையும் மகன்மையும் முதன்மையும்போல, அல்லது புல்லும் பூண்டும் செடியும் கொடியும் மரமும்போல, மொழிவளர்ச்சி தொடர்ச்சிகளின் பல்வேறு நிலைகளைப் பற்றியது.

அந் நிலைகள் அசைநிலை (Monosyllabic), புணர்நிலை (Com- pounding), பகுசொன்னிலை (Inflexional), திரிநிலை, கொளுவுநிலை (Agglutivative), தொகைநிலை (Synthetic), சிதைநிலை என எழுவகைய. அவற்றுள்,

அசைநிலையாவது, மா, பொன் என்பவைபோல, ஒரு மொழிச் சொற்களெல்லாம் ஓரசைச் சொற்களாயிருந்து, குரல் வேறுபாட்டாலும் இட