உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள் வேறுபாட்டாலும் வெவ்வேறு பொருள் பயப்பனவாயும் வெவ்வேறு சொல்வகைப் படுவனவாயுமிருத்தல்.

சீன மொழிகளும் இந்து-சீன (Indo-Chinese) மொழிகளும் இத்தகைய. எடுத்துக்காட்டாக, சன் (Shan) என்னும் இந்து - சீன மொழியில், கௌ என்னும் அசைச்சொல்லுக்கு, 'நான்', 'பழைமையாயிரு' 'ஒன்பது', 'கொண்டை', 'பேய்க் கஞ்சாமை', 'ஆந்தை', 'முறையீடு', 'கெண்டைக்கால்’, ‘புதியாமரம்', 'பால்சம் செடி', ஆலை எனப் பலபொருளுள. இப் பொருள்களெல்லாம் குரல் வேறுபாட்டால் குறிக்கப்படுவன. சில மொழிகளிற் பதினைந்திற்குமேலும் குரல் வேறுபாடுண்டு.

ஒரே சொல் வடிவு திரியாது இடவேறுபாட்டால் வெவ்வேறு சொல்வகைப்படுவது பல மொழிகட்கும் பொதுவேனும், அசைநிலை மொழிகட்குச் சிறப்பாம். அது 'பொன் யாது', இது 'பொன்', 'பொன் வளையல்', 'நெல் பொன் விளைந்தது' என்னும் தொடர்களில் பொன் என்னும் சொல், முறையே, பெயரும் வினையும் பெயரெச்சமும் வினையெச்சமுமாயிருத்தல் போன்றது.

புணர்நிலையாவது, 'பாய்மா, 'மாசெல்சுரம்' என்றாற் போலச் சொற்கள் திரியாது புணர்ந்து ஒரு சொற்றன்மைப்பட்டு நிற்றல்.

என

பகுசொன்னிலையாவது, வில்லவன்-வில்லான்-வில்லன் இருசொற் புணர்ந்து, நிலைச்சொல் பகுதியும் வருஞ்சொல் விகுதியுமாக மாறி ஒரு சொல்லாய் நிற்றல்.

திரிநிலையாவது, ஆங்கிலத்தில், 'man' என்னும் பெயர்ச்சொல் பன்மை குறிக்க 'men' என்றும், `give' என்னும் வினைச் சொல் இறந்தகாலங்காட்ட 'gave' gave' என்றும் திரிந்தாற் போன்றது. இதை, உள்திரிநிலை அல்லது இடைதிரிநிலை எனவுங் கூறலாம்.

சேமிய (Semitic) மொழிகள் திரிநிலைக்குச் சிறந்தவை. அவற்றுள் வேர்ச்சொற்களெல்லாம் மும்மெய்யாலமைந்தவை. அவற்றினின்று திரிந்த சொற்கூட்டங்கள் பெரும்பாலும் மூவிடவுயிர் வேறுபட்டாலேயே பொருள் வேறுபாட்டை யுணர்த்துகின்றன.

எ-கா: அரபிமொழியில் க்த்ப் என்ற மும்மெய்ச் சேர்க்கை ஒரு வேர்ச்சொல். இதனின்று பிறந்த சொற்களாவன:

கதப = எழுதினான்; கத்ப்=எழுத்து; காதிப் = எழுத்தாளன்; மக்தூப் = எழுதி; தக்திப் = எழுதுவித்தல்; முக்காதபத் = எழுத்துப் போக்குவரத்து நடத்தல்; இக்தாப் = சொல்வ தெழுதுவித்தல்; தக்காதுப் = ஒருவர்க்கொருவர் எழுதுதல்; முத்தக்காதிப் = எழுத்துப்போக்குவரத்து நடத்துவோன்; மக்தப் எழுதும் பள்ளி; கித்தாப் = புத்தகம்; கித்பத் அல்லது கித்தாபத் வெட்டெழுத்து.

=

=

கொளுவுநிலையாவது, ஒரு நெடுஞ்சொற்றொடர்ப் பொருளமையு மாறு, ஒரு சொல்லொடு பல ஈறுகளை மேன்மேலும் சங்கிலிபோற்