உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள் ஏனையவெல்லாம் மொழியினங்களின் தனிப்பட்ட இயல்புகளேயன்றி மேல்வளர்ச்சி நிலைகளல்ல.

தமிழே திரிந்து திரவிடமாகியிருப்பதால், தமிழுக்கும் திரவிட மொழிகட்கு முள்ள மரபியலுறவு மிகத் தெளிவாம். திரவிடத்தின் திரிபு ஆரியமாதலால், தமிழுக்கும் ஆரியத்திற்கும் இரண்டாங் கூட்டுறவுண்டு. ஆயினும், ஆராய்ச்சி யின்மையால் பலர் இதை அறிவதில்லை. தமிழுக்கும் ஆரியத்திற்குமுள்ள தொடர்பு எனது 'வடமொழி வரலாறு' என்னும் நூலில்

விரிவாக விளக்கப்பெறும்.

திரவிடம்போல அத்துணை மரபியலுறவுறாது சேய்மைப்பட்ட பிறமொழிகள்கூட, சில பல தமிழ்ச்சொற்களையும் நெறிமுறைகளையுங் கொண்டிருப்பதுடன், மொழிகட்கெல்லாம் அடிப்படையான சொல் வரிசையைச் சேர்ந்த மூவிடப்பெயர்கட்கும் தமிழ்ச்சொற்களையே அல்லது அவற்றின் திரிபையே கொண்டுள்ளன. தமிழ் மூவிடப்பெயர்களுள் அல்லது அவற்றின் திரிபுகளுள் ஒன்றேனும் இல்லாத அல்லது வழங்காத மொழியே உலகிலில்லை என்று உறுதியாய்ச் சொல்லலாம்.

எ-கா :

-

நூன், நூம்; நீன், நீம் என்பன பழந்தமிழ் முன்னிலைப் பெயர்கள். இவற்றின் னகரவீறு ஒருமையையும் மகரவீறு பன்மையையுங் குறிக்கும். இவற்றுள், நீன் என்னுஞ் சொல் இன்றும் தென்னாட்டு வழக்கிலுள்ளது. நூன் நூம் என்பன இருவகை வழக்கும் அறினும், அவற்றின் வேற்றுமைத் திரிபான நுன் நும் என்னும் அடிகள் இன்றும் செய்யுள் வழக்கிலுள்ளன. நீன் என்னுஞ் சொல்லின் கடைக்குறையான நீ என்பது இருவகை வழக்கிலும் உள்ளது.

நீ

நூன் என்பது 'தூ', 'து', 'தௌ', 'த்வம்', என்றும்; நூம் என்பது 'தும்', ‘யூ’, 'யூயம்' என்றும் ஆரியத்தில் வழங்குகின்றன.

நூன்

து

-நூ தூது தெள த்வம். நூம் - தூம் - தும். ந - த, போலி. நூம் யூம் - யூ; யூம் -யூயம். ந - ய, போலி.

நீ என்பது சீன மொழியில் 'நி' எனக் குறுகி வழங்குகின்றது; நிமென் என்பது இதன் பன்மை.

பொர்னு என்னும் ஆப்பிரிக்க மொழியில் 'நி' என்பதே முன்னிலை யொருமைப் பெயர்

சில பழஞ் சித்திய மொழிகளில் நீ என்னும் பெயர் தமிழிற் போன்றே சிறிதும் திரியாமல் வழங்கிவந்தது.

ஆத்திரேலிய மொழிகளின் முன்னிலை யொருமை 'நின்ன', 'ஙின்னீ’ ‘ஙிந்தெ’, என்பன: இருமை ‘நிவ', 'நுர' என்பன; பன்மை ‘நிமெதூ' என்பது.

இங்ஙனமே, ஏனை யிடப்பெயர்களும் இயல்புவடிவில் அல்லது திரிபுவடிவில் ஏறத்தாழ எல்லா மொழிகட்கும் பொதுவாகவுள்ளன.