உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முதற்றாய் மொழியின் இயல்புகள்

17

3. கூட்டுவரி(சம்யுக்தாக்ஷரம்), மெய்ம்முதல், க ச த ப மெய்களின் பின் வேற்றுமெய் வரவு(வேற்றுநிலை மெய்ம்மயக்கம்), வல்லின மெய்யீறு முதலியன வில்லாதிருத்தல்.

4.

5.

6.

7.

8.

9.

10.

11.

12.

13.

14.

15.

முன்னொட்டுகளை (உபசர்க்கங்களை) மிகுதியாகக் கொள்

ளாமை.

இடுகுறிப்பெய ரில்லாதிருத்தல்.

ஏறத்தாழ எல்லாச் சொற்கட்கும் வேர்ப்பொருள் உணர்த்தல். பல மொழிகட்கும் அடிப்படைச்சொல் வழங்கி யிருத்தல். பன்மொழிப் பொதுச்சொற்களின் மூல வடிவத்தைக் கொண் டிருத்தல்.

சொல்வளமுடைமை.

நெடுங்காலம் கழியினும் மிகச் சிறிதே திரிதல்.

இயற்கையான முறையில் வளர்ந்திருத்தல்.

இயன்மொழியாயன்றித் திரிமொழியா யில்லாதிருத்தல். பொருள்பற்றியன்றி ஈறுபற்றிப் பாலுணர்த்தாமை.

பொருட்பாகுபாடு செய்வதில் எளிய முறையைத் தழுவி யிருத்தல்.

முதற்கால மக்களின் எளிய கருத்துகளைக் கொண்டிருத்தல். முதற்றாய்மொழியின் நிலைமைகள்

1.

மாந்தன் தோன்றியிருக்கக்கூடிய இடத்தில் தோன்றியிருத்தல்.

2. உலகப் பழங்குடி மக்களாற் பேசப்பட்டிருத்தல்.

இங்குக் கூறப்பட்ட இயல்புகளும் நிலைமைகளும் இருமொழி களுள்ளும் எதற்குரியனவென்று வினவின், தமிழுக்கே யுரியனவென்று பகைவரும் விடையிறுப்பர், பகுத்தறிவும் நடுநிலையும் உடையராயின்.

66

நேர்நின்று

காக்கை வெளிதென்பார் என்சொலார் தாய்க்கொலை சால்புடைத் தென்பாரு முண்டு.”

ஆதலால், வேண்டுமென்று சொல்பவர் எதையும் சொல்வர்.

'ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்

-

ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது

தன்நேர் இலாத தமிழ்.”

என்று பழங்காலத்திலும் தமிழின் தாய்மையைப்பற்றித் தமிழறிஞர்க்கு நல்லுணர்ச்சியிருந்தது. கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் குலப்பிரிவினையினால், தமிழர்க்குண்டான தாழ்வுணர்ச்சியினாலேயே, தமிழின் தலைமையை ஒப்புக்கொள்ளும் துணிவில்லை. இத் துணி