உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

கவளம்

வுருண்டை.

கௌவும் அல்லது வாய்கொள்ளும் அளவான உண

கவளம் கவழம்.

"கவழ மறியான் கைபுனை வேழம்" (கலித். 80)

கவ்வு – கப்பு.

கப்புதல் = கொள்ளுமளவு வாயிலிட்டு மொக்குதல் அல்லது விழுங்குதல்.

“அவல்பொரி கப்பிய கரிமுகன்” (திருப்பு. விநாயகர். 1)

கவியம் = கடிவாளம்(பிங்.). கவியம்-Pkt. kaviya. கவிகம் = கடிவாள இரும்பு. கவிகம்-Skt. kavika.

கவைத்தல்

கவ் கவல் கவர். கவ்வு

=

கவட்டை.

கவர்தல் = பல காலாகப் பிரிதல்.

“காவிரி வந்து கவர்பூட்ட” (புறம். 35 : 8)

கவர்த்தல் = 1. வழிகள் பிரிதல்,

“அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும்” (சிலப். 11 : 73)

ம., தெ. கவ, க. கவலு.

2. கவடுபடுதல்.

கவர் = 1. நீர்க்காற் கிளை.

"தெற்குநோக்கி நீர்பாய்கிற கவருக்கு” (S.I.I. iii, 45)

2. பல்பிரிவு.

66

"மகளிர் நெஞ்சம்போற் பலகவர்களும் பட்டது” (சீவக. 1212)

3. மரக்கிளை. 4. சூலக்கிளையலகு,

ம., தெ., து. கவ, க. கவல்.

கவர்க்கால் (கவராயுள்ள முட்டுக்கட்டை, கவையுள்ள மரம், கிளை வாய்க்கால்), கவர்க் குளம்பு, கவர்ச்சுத்தியல், கவர்த்தடி, கவர்நெறி, கவராசம்(divider) முதலிய சொற்களை நோக்குக.

கவர்படு பொருண்மொழி = பல்வேறு பொருள்தரும் சொல் அல்லது சொற்றொடர்.

கவர்கோடல் = பலவாறாகக் கருதி ஐயுறல்.

“கவர்கோடல் தோன்றாது (LDGOF COLD. 27: 22)

கவடு = 1. மரக்கிளை, கவருள்ள மரக்கிளை.

"காதலுங் களிப்பு மென்னுங் கவடுவிட்டு" (சீவக. 1389)

2. தொடைச்சந்து.