உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாய்ச்செய்கை யொலிச்சொற்கள்

கவடு நுழைந்த பயல் என்பது உலக வழக்கு.

கவட்டி = ஓர் எட்டு. 3. பகுப்பு

“கவடுபடக் கவைஇய உந்தி" (மலைபடு. 34)

தெ. கவட்ட.

கவட்டடி = மரக்கிளைக் கவர், கவை.

ம. கவ, க. கவத்த.

கவட்டை = கவை, கவண்.

=

கவண் = கவைபோல் இருபுறமும் கயிறு அல்லது வாருள்ள கல்லெறி கருவி.

“கடுவிசைக் கவணி னெறிந்த சிறுகல்” (அகம். 292)

ம. கவண், க., து, கவணெ.

கவண்-கவணை.

66

கவணையிற் பூஞ்சினை யுதிர்க்கும்” (கலித். 23)

கவண்-கவண்டு-கவண்டி.

23

கவணம் = சீலைத்துணியை இரண்டாகக் கவர்படக் கிழித்துக் கட்டும் காயக்கட்டு.

கவணி = கவணத்திற் குதவும் மெல்லிய சீலை. ம. கவணி. கவணை = கவைபோல் அமைக்கும் மாட்டுத்தொட்டி. கவையணை-கவணை. தெ. கவணமு.

கவடு-கவடி

=

பிளவுபட்ட பலகறை.

ம., க. கவடி, தெ. கவ்வ(gavva).

கவடி-காடி = மாட்டுத்தொட்டி.

கவளி = 1. கவண்போல் அமைத்துத் தூக்கும் பொத்தகக் கட்டு.

66

‘புத்தகக் கவளி யேந்தி" (பெரியபு. மெய்ப். 7)

2. புத்தகக் கட்டுப்போன்ற வெற்றிலைக் கட்டு.

கவளி-கவளிகை = சிறு கவளி.

"புத்தகங் கட்டி யார்த்த கவளிகையே கொலோ" (சேதுபு. இராமதீர். 49) கவளிகை-Skt. kavalika (கவலிக்கா).

கவான் = 1. கவைபோன்ற தொடைச்சந்து, தொடை.

66

கழுமிய வுவகையிற் கவாற்கொண் டிருந்து” (மணிமே. பதி. 27)

2. தொடைச்சந்து போன்ற மலைப்பக்கம்.

"மால்வரைக் கவான்” (பட்டினப். 138).

கவை = பிளவு, பிரிவு, கவர், கிளை, கவட்டை.

கவைக்கால், கவைக்குளம்பு, கவைக்கொம்பு, கவைக்கோல், கவைத்தாம்பு, கவைத்தாளலவன் (பெரும்பாண். 208), கவைநா, கவைமுட் கருவி, கவையடி முதலிய தொடர்ச்சொற்களை நோக்குக. ம. கவ.