உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

கவ்வு-கப்பு = கவர்கொம்பு, கிளை, பிளவு. கப்புங் கவரும் என்பது உலக வழக்கு. கப்பு-கப்பி. கப்பித்தல் = கவர்படுதல்.

“கப்பித்த காலையுடைய ஞெண்டினது” (பெரும்பாண். 208, உரை) கப்பு-கப்பை. கப்பைக்கால் = கவட்டுக்கால்.

கவ்வு-காவு. காவுதல் = 1. தண்டின் இருபுறமும் கவைபோற் கலத்தை அல்லது பொருளைத் தொங்கவிட்டுத் தோளிற் சுமத்தல். “காவினெங் கலனே" (புறம். 206)

2. தோளிற் சுமத்தல், சுமத்தல்.

“ஊனைக் காவி யுழிதர்வர்" (தேவா. 338: 1)

காவு + அடி = காவடி = 1. காவுதடி. 2. முருகன் காவடி. 3. சோற்றுக் காவடி. 4. தண்ணீர்க் காவடி.

காவடி-காவட்டு = கள்ளுக் காவடி.

காவு-கா = 1. காவடித் தண்டு.

“காமமு நாணு முயிர்காவாத் தூங்கும்" (குறள். 1163)

2. காவடி போன்ற துலாக்கோல்.

3. துலாம் போன்ற ஒரு நிறை.

“காவென் நிறையும்" (தொல். எழுத்து. 169)

கப்பு = காவுந்தோள்.

“கப்பா லாயர்கள் காவிற் கொணர்ந்த” (திவ். பெரியாழ். 3 : 1 : 5) கவல்-கவலை = 1. மரக்கிளை(பிங்.)

2. கவர்த்த வழி, பல தெருக்கள் கூடுமிடம்.

"மன்றமுங் கவலையும்...திரிந்து" (சிலப். 14 : 24)

"கவலை முற்றம்" (முல்லைப். 30)

3. மனக்கவற்சி, மனவருத்தம்(கவர்த்த எண்ணம்). ம. கவல.

4. அச்சத்தோடு கூடிய அக்கறை.

கவலுதல் = பலவாறாகக் கருதி வருந்துதல். க. கவலு.

கவல்-கவலம், கவலை. கவல்-கவலி. கவலித்தல் = கவலுதல்.

கவை = கரிசனை, அக்கறை.

கவ்வை = கவலை.

'கவ்வையாற் கலங்குமனம்" (திருக்காளத். பு. 18 : 27)

கைப்பற்று

கவ-கவவு = 1. கையால் தழுவுதல்.

“கண்ணு நுதலுங் கவுளுங் கவவியார்க்கு” (கலித். 83 : 17)