உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

=

கவவுதல் விரும்புதல்.

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

"கலிங்கம்.....கவவிக் கிடந்த குறங்கினாள்" (சீவக. 1058)

கவற்சி = விருப்பம். கவர்ச்சி = மனத்தை இழுக்கை. கப்பு = கவர்ச்சி.

“கப்பின்றா மீசன் கழல்" (சிவ. போ. 11, 5, வெண்.)

=

கவ கா. காதல் விரும்புதல், பேரன்பு கொள்ளுதல். கா காவு. காவுதல் = நச்சுதல்.

"தேனைக் காவியுண் ணார்சில தெண்ணர்கள்" (தேவா. 338 : 1) கா + அம் - காம் = விருப்பம், காதல்.

=

ஒ.நோ: ஏ + உம் ஏம்

யாம் - நாம். காம் + உறு = காமுறு.

காமுறுதல் = 1. விரும்புதல்,

“இன்பமே காமுறுவ ரேழையர்" (நாலடி. 60)

2. வேண்டுதல்.

66

கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ” (கலித். 16)

காம்

காமு - காமம்.

-

-

ஒ.நோ: விழு - விழும் விழும் - விழுமு விழுமம். குழு - குழுமு குழுமம், பரு - பரும் பரும் - பருமு - பருமன். காமு - காமுகம் - காமுகன் - Skt. kamuka(காமுக்க).

காம் + மரு

குழும் -

காமரு காமர் = விரும்பத்தக்க, அழகிய.

“காமர் கடும்புனல்" (கலித். 39).

"காமர் கயல்புரள" (நளவெ.)

காம் + அர் - காமர் = காமுகர்.

காம் + இ காமி = காமுகன்.

66

“களிமடி மானி காமி கள்வன்” (நன். 38)

காமி-Skt. kamin(காமின்).

காமித்தல் = 1. விரும்புதல். ஒ.நோ: காதல்-காதலி.

66

“தப்புதி யறத்தை யேழாய் தருமத்தைக் காமி யாதே” (கம்பரா. நிந்த. 54)

2. காமங் கொள்ளுதல்.

காமம் = கணவன் மனைவியரிடைப்பட்ட காதல், மணம். காமத்துப் பால் என்னும் திருக்குறட் பகுதிப் பெயரை நோக்குக.

சிவகாமி = சிவனைக் காதலிக்கும் மலைமகள்.

ஒ.நோ: வேட்டல் = விரும்புதல், காதலித்தல். வேள் = திருமணம். காமம்-Gk. gamos(marriage), Skt. kama(காம).

காமம் என்னும் சொல் முதற்காலத்திற் பொதுவான ஆசையையே குறித்தது.