உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

கோணம் என்னும் தென்சொல்லே, கிரேக்கத்தில் 'gonia’(angle)

என்றும், அதன் வழியாய் ஆங்கிலத் தொடர்ச்சொற்களில் gon என்றும் திரியும்.

எ-கா:

Trigonometry (திரிகோண மாத்திரை).

polygon (பல கோணம்).

கோண் என்பதன் நேர்மூலம் கோள்.

ஒ.நோ: பெள் - பெண், வேள் - வேண்.

கோள் = வளைவு, வட்டம், உருண்டை, உருண்டையான கிரகம். ஊர்கோள் = மதியைச்சுற்றி ஊர்ந்துள்ள வட்டம்.

கோள் என்னும் பகுதியினின்று, கோளம், கோளா, கோளகை முதலிய சொற்கள் பிறக்கும்.

வட்டக் கருத்தினின்று உருட்சிக் கருத்தும், உருட்சிக் கருத்தினின்று திரட்சிக் கருத்தும் தோன்றும். வளைவு முற்றியதே வட்டம். கன வடிவான வட்டமே உருண்டை.

=

கோளம். கோளம்

=

கோள் + அம் உருண்டை. பூகோளம், குடகோளம், குணகோளம், அண்டகோளம் முதலிய தொடர்களில் கோளம் என்னும் சொல்லின் பொருளை நோக்குக.

கோள் + ஆ = கோளா. 'ஆ' ஒரு தொழிற்பெயர் விகுதி.

ஆ உணா. ரு +

=

இரா. இருத்தல் = கருத்தல்.

எ-கா : உண் + கோளா = உருண்டையான ஒருவகைச் சிற்றுண்டி.

கோள் + அகை = கோளகை. கோளகை = உருண்டை. 'அகை’ ஓர் ஈறு; ‘வாடகை' ‘கொட்டகை’ என்பவற்றிற் போல.

கோளம் முதலிய சொற்கள் தமிழில் வழக்கு அருகியமையாலும், வடமொழியில் வழக்குப் பெருகியமையாலும், வடசொற்கள்போலத் தோன்றுகின்றன. இங்ஙனமே வடமொழிச் சென்ற பிற தென்சொற்களிற் பலவும் என்க.

ல, ள, ழ ஆகிய மூன்றும், முறையே பிஞ்சும், காயும், கனியும் போல, மெலிந்தும் திரண்டும் முதிர்ந்தும் உள்ள ஒரே ஒலியின் வேறுபாடுக ளாதலின், சொற்களில் ஒன்றுக்கொன்று போலியாக வருவதுண்டு.

எ-கா : வேலை-வேளை, பவளம்-பவழம்.

இம் முறையில், கோள் என்னும் சொல், கோல் என்னும் வடிவும் கொள்ளும். உண்மையில், கோல் என்பதே முந்தியதாகும்.

கோல் = வளைவு, உருட்சி, திரட்சி. திரண்ட தடி, தடி, தண்டு, அடி, காம்பு. கோல்தொடி = திரண்ட வளையல்.

=

=

உருண்டை, கல் மண் கண்ணாடி

கோல் + இ கோலி கோலி முதலியவற்றாலாய சிற்றுருண்டை.