உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்குலமுங் குடும்பமும்

கோள் என்பதன் நேர்மூலம் கொள்.

கொள்

=

(வி.) வளை, சுற்று, சுழல்.

கொள் = (பெ.) வளைவு, வளைந்த காணக்காய், காணம். "காயும் கோணக்காய் சொல்லடா மைத்துனா

66

கதையும் விடுவித்தேன் கொள்ளடா மைத்துனா

என்பது ஒரு விடுகதை உரையாட்டு.

கொள்-கோள்(முதனிலை திரிந்த தொழிற்பெயர்) சுற்றிவரும் கிரகம் எனினுமாம்.

கொள் + பு = கொட்பு. கொட்பு = சுற்றுகை.

53

=

கதிரவனைச்

கொள் என்னும் பகுதியினின்று, கொக்கி, கொண்டி முதலிய சொற்களும், கொட்டு, கொடு முதலிய வழியடிகளும் பிறக்கும். கொள்-கொட்கி-கொக்கி = வளைந்த கொளுவி.

ஒ.நோ: A.S. hoc, hooc; D. hook; Ice. haki; Ger. haken; O.H.G hako; L.G. hake; E. hook.

கொள்-கொட்கு-கொக்கு = கொக்கிபோல் வளைந்த கழுத்தையுடைய

பறவை.

கொள்-கொண்டி. ஒ.நோ: வள்-வண்டி.

கொண்டி = கொக்கி அல்லது வளையமுள்ள நாதாங்கி.

கொள்-கொம்-கொம்பு = வளைந்த கிளை, கிளை, வளைந்த மருப்பு அல்லது கோடு.

கொம்பு என்னும் சொல், தெலுங்கில் இன்றும் கொம்மு என்றே வழங்கும்.

ஒ.நோ: வள் - வம் - வம்பு.

கொம்பு - கொப்பு. கொம்பு - கம்பு.

கொள்

கொட்டு - கொட்டம். ஒ.நோ: வள் வட்டு – வட்டம்.

கொட்டம் = வளைவு, வட்டமான மாட்டுத் தொழுவம் அல்லது பட்டி, நேர்மையில்லாத, அஃதாவது, நீதி நெறியினின்று கோணிய கொடிய ஆரவாரம்.

முதற் காலத்தில் ஆட்டுப் பட்டிகளும் மாட்டுப் பட்டிகளும் வட்ட வடிவமாகவே அமைக்கப்பட்டன; பிற்காலத்தில் மழைக் காப்பிற்குக் கூரை யமைந்தபோது கூடமாகக் கட்டப்பட்டன.

கொட்டு + + இல்

கொட்டில்

=

மாட்டுத் தொழுவம், தொழுவம்

போன்ற கூடம், பட்டறை, ஆயுதசாலை.

கொட்டு + அகை = கொட்டகை. கொட்டகை = தொழுவம், கூடம். இன்றும் வடார்க்காட்டார் மாட்டுத் தொழுவத்தைக் கொட்டகை என்பர்.

கொட்டு + ஆரம் – கொட்டாரம். ‘ஆரம்’ என்பது ஓர் ஈறு; கூடாரம், வட்டாரம், பணியாரம் என்பவற்றிற் போல.