உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்குலமுங் குடும்பமும்

55

ஒ.நோ: இல் = மனை, மனைவி, குடும்பம், குடி, குலம்.

குடி குடிகை = சிறு வீடு, சிறு கோயில். 'கை' ஒரு குறுமைப் பெயரீறு. குடிகை - குடிசை = சிறு வீடு, cottage.

குடு

குடில் = சிறு வீடு. 'இல்' ஒரு குறுமைப் பெயரீறு.

எ-டு : தொட்டி-தொட்டில்.

குடில்-குடிலம் = வளைவு, சிறு வீடு.

குடிலம்-குடீரம்(வ.).

குடி - A.S. cote; E. cot; Ger. kot, koth, kote; Ice. and D. kot = hut or small house.

குடி (குடிம்பு) - குடும்பு குடும்பம் - kutumba(வ.).

குடும்பு கடும்பு = குடும்பம்,சுற்றம்.

"கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது" (புறம். 68 : 2)

உ அ, போலி. எ-டு: முடங்கு-மடங்கு, முறி-மறி, குடம்-கடம்(வ.). குடம் – குடுவை-குடுக்கை = உருண்டைக் கலம், சுரைக்கலம். குள் என்பதன் நேர் மூலம் குல்.

குல் - குலம் = வட்டமான குடியிருப்பு, வீடு, வீட்டிலுள்ள குடும்பம், குடும்பத்தின் பெருக்கமான மக்கள் வகுப்பு, கூட்டம், தொகுதி. தேவகுலம் கோயில்.

=

குலம் - குலன். E. clan; Gael. clann; It. clann, cland.

முதற்காலத்தில் குடிசைகளும் வீடுகளும் வட்ட வடிவாய்க் கட்டப்பட்டன; அல்லது வளைந்த கூரையுடையனவா யிருந்தன. வட்ட வடிவான சிறு வீடுகளை இன்றும் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும்

காணலாம்.

குல்

- குலவு, குலாவுதல்

=

வளைதல்.

குலவு - L. curvus, E. curve.

=

குலவு - குலாவு. குலாவுதல் வளைதல்.

குல் குர்

குரம்

குரம் = வட்டமான குதிரைக் குளம்பு.

குரம் - குரங்கு = வளைவு, கொக்கி. குரங்குதல் = வளைதல்.

குரம் - குரம்பை குரம்பை = வளைந்த குடில், குடில்.

குரம் - குரவை

குரவை = மகளிர் வட்டமாக நின்று ஆடுங் கூத்து. குரவை - Gk. choros = originally a dance in a ring.

L. chorus, coracle.

குல்

=

a a

குன். குன்னுதல் வளைதல், வளைந்து குறுகுதல். குன் - குனி. குனிதல் = வளைதல்.