உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

குன் குன்

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

குனுகு. குனுகுதல் = உடல் வளைதல்.

கூன் = முதுகு வளைவு.

குல் என்பதன் நேர் மூலம் உல்.

உல் - உலம் = உருட்சி, திரட்சி, திரண்ட கல்.

உலம்வா - உலமா. உலமருதல் = சுழலுதல், உழலுதல்.

உலம்

உலகு

உலகம்-லோக(வ.)

அல்லது சுழலும் கோள்.

உல் - உல - உலவு. உலவுதல் = சுற்றுதல்.

=

உருண்டையான மாநிலம்

உல - உலா = நகரத்தைச் சுற்றி வருதல், அரசனது வெற்றியுலாவை வருணிக்கும் நூல்.

உலா - உலாவு = (வி.) நகரத்தைச் சுற்றிவா, சுற்றி வா.

உல் - உர் - உருள். உருளுதல் = வட்டமாகச் சுழன்று செல்லுதல். உருள் - E. whirl, L. roll.

உருள் உருளை உருடை ரோதை - L. rota L. rota = a wheel.

a

இதுகாறும் காட்டப்பட்ட சொற்கள் கண்ட வளவில் தொடர்பறியப் படாது பன்மரப் பிணையல் போலப் பிற சொற்களுடன் பின்னிக் கிடப்பி னும், ஒரு முறை பிரித்துக் காட்டப்பட்டபின் எவர்க்கும் தொடர்பு விளங்காதிரா. கோடு என்னும் உச்சிக் கொழுந்திலிருந்து உல் என்னும் அடி வரை பிரித்துக் காட்டப்பட்டது. உல் என்பதற்கு மூலமாகிய வேரோ ஆழ்ந்த ஆராய்ச்சியினாலன்றி அறியவும் அறிவிக்கவும் முடியாது. அவ் வாராய்ச் சியை என் ‘ஊகாரச் சுட்டு வளர்ச்சி' என்னும் நூலிற் கண்டுகொள்க.

இச் சொல்லாராய்ச்சிக் கட்டுரையால் விளக்கப்பெறும் சொன்னூல் மொழிநூல் உண்மைகளும் நெறிமுறைகளுமாவன:

(1) உலகத்திற் பல மொழிகள், சிறப்பாகத் திருந்திய மொழிகள், ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையன.

(2) தமிழிலுள்ள பன்மொழிப் பொதுச் சொற்கட்குத் தமிழில்தான் வேருண்டு.

(3)

(4)

(5)

ஒரே பெருங் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு மூலத்தினின்று மேலும் மேலும் பல அடிகளும் வழியடிகளும் தோன்றிப் பற்பல சொற்களைப் பிறப்பிக்கின்றன.

ஒரு கருத்தினின்று மற்றொரு கிளைக்கருத்துத் தோன்றும். பொருள் திரியும்போது சொல்லும் திரிய வேண்டும்.

(6) சொற்கள் திரியும்போது பல்வகை வேறுபாடுகளையும் ஏற்கும்.

(7)

“எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே.' "மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா.'

وو

ஆனால்,