உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல்வேர் காண்வழிகள்

11. சொற்களைச் செவ்வையாய்ப் பிரித்தல்

65

உடக்கெடுத்துப் போதல் = உடக்கு + எடுத்துப் போதல் (கூடாதல், தோலும் எலும்புமாதல், மிக மெலிதல்). இதை உடல் கெடுத்துப் போதல் என்று சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி பிரித்திருப்பது தவறாம். உடங்கு - உடக்கு = உடம்புக் கூடு.

12. பொருள்களின் சிறப்பியல்பறிதல்

ஒவ்வொரு பொருளின் (பார்த்தமட்டிற் கண்ணைக் கவரும்) சிறப்பியல்பையும் உற்றுநோக்கியே, அததற்குரிய பெயரை இட்டிருக் கின்றனர் முன்னைத் தமிழர்.

எ-கா :காகா(காக்கா) என்று கரைவது காகம்(காக்கை). மூன்று அணிகளை (வரிகளை) முதுகில் உடையது அணில். இருமை(கருமை)யான மாட்டினம் எருமை. வழுவழுவென்றிருக்கும் மரம் வாழை.

முடிவேய்ந்த பேரரசன் வேந்தன். வேய்தல் = முடியணிதல். வேய்ந்தோன்-வேந்தன். கொன்றை வேய்ந்தானை(சிவனைக்) கொன்றை வேந்தன் என்று கூறுதல் காண்க. சேர சோழ பாண்டிய முக்குடியரசர்க்கே முடியணியும் உரிமை முதற்காலத்திலிருந்தது.

13. பொருள் வரிசையறிதல்

எ-கா :அருகுதல் = சிறுத்தல், ஒடுங்குதல். அரு-அரை = சிறுத்த அல்லது ஒடுங்கிய இடை, உடம்பின் நடு, பாதி. கோல்-கால்

கம்பம், தூண், தூண்போல் உடம்பைத் தாங்கும் உறுப்பு, உடம்பின் காற்பகுதி, காற்பகுதி (நாலிலொன்று).

உடம்பின் பாதியளவாயிருப்பது அரையென்றும், நாலிலொரு பகுதி யாயிருப்பது காலென்றும், தலைகீழாய்ப் பொருட்கரணியங் காட்டுவது உண்மைக்கு நேர்மாறாம்.

14. ஒப்புமையமைப்பு(Analogy) அறிதல்

எ-கா: குழல் - குடல், புழல் - புடல் - புடலை ௧. படல, தெ. பொட்ல, வ. பட்டோலிக்கா, கடை

vitula.

கடலை, விடை

விடலை

L.

மை - மயிர், தை - தயிர்; தைத்தல் குத்துதல். முட்குத்தினால் முள் தைத்தது என்பர். பாலிற் பிரைமோர் ஊற்றுதலைப் பிரைகுத்துதல் என்பது உலக வழக்கு. பிரை தைத்தது தயிர் – வ. ததி (dadhi), இ. தஹீ.

15. வரலாற்றறிவையும் ஞாலநூலறிவையும் துணைக்கோடல்

எ-கா:

பாண்டவர் தோன்று முன்னரே

முன்னரே பாண்டியர் தென்னாட்டை

ஆண்டுவந்தனர். பாண்டவருள் ஒருவனான அருச்சுனன் திருநீராடத்