உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

ககர சகரப் பரிமாற்றம்

எம் மொழியையும் வரலாற்றடிப்படையில் ஆய்ந்தால்தான், அதன் உண்மையான இயல்பை அறிய முடியும். அவ் வரலாறும், தோன்றல், திரிதல், கெடுதலின்றி, உள்ளதை உள்ளவாறுரைப்பதாய் இருத்தல் வேண்டும். தமிழும் தமிழ் வரலாறும் கடந்த ஐயாயிரம் ஆண்டுகளாக, முறையே, சிதைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் வருதலின், நடுநிலையும் நெஞ்சுரமும் ஆழ்நோக்கும் உடைய உள்நாட்டு ஆராய்ச்சியாளரன்றி, பிறர் அவற்றின் உண்மையியல்பை முற்றும் உணரல் அரிது.

கனமிகு கால்டுவெல் கண்காணியார், காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருளை ஆயும் பெருந்தகையரேனும், திரவிட மொழிநூலைத் தோற்றுவிக்க இறைவனாலே அழைக்கப்பெற்றவரேனும், எதிர்காலத் திரவிட மொழிநூல் ஆராய்ச்சியாளர்க்கெல்லாம் இன்றியமையாத வழிகாட்டியாரேனும், காண்டற்கரிய வேர்ச்சொற்களைக் கண்டறிந்து நுண்மாண் நுழைபுலத்தரேனும், தம் அயன்மை காரணமாகவே, சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர் குடிப்பெயர்களையும் முத்தமிழ் நாட்டு மக்கட் பெயர்களென்றும், வட சொற்களென்றும், பிறழக் கொண்டார்.

சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தர் குடிகளும் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வந்தவை எனப் பாராட்டத்தக்க முதுகுடிக ளாதலானும், தமிழ், ஆரியர் நாவலந்தீவிற் கால்வைக்கு முன்னரே குமரிக் கண்டத்தில் தோன்றி முழு வளர்ச்சியடைந்திருந்த மொழியாதலானும், மூவேந்தர் குடிப்பெயர்களை வடசொல்லெனக் கொள்வதற்குக் காட்டப் பட்டுள்ள காரணம் ஒன்றும் பொருந்தாமையானும், அவற்றைத் தமிழ மரபிற்கேற்பத் தென்சொல்லென்று கொள்வதே தக்கதாம்.

தமிழ் படிப்படியாக நீண்டகாலம் பண்படுத்தப்பெற்று உயர்நிலை யடைந்த தனிமொழியென்றும், அதன் சொற்களை அதை அடிப்படை யாகக் கொண்டே விளக்க வேண்டுமென்றும் அங்ஙனம் விளக்க முடியாத சொற்கட்கே அயன்மொழி மூலந் தேடலாமென்றும், அத்தகை நிலையிலும் அவற்றின் தமிழ் மூலச்சான்று காலக்கடப்பில் மறைந்து போயிற்றென்று கொள்வதல்லது, தமிழர் அயன்மொழித் துணைகொண்டு தமக்கு வேண்டிய சொற்களை அமைத்துக்கொண்டனர் என்று கொள்வது பொருந்தா தென்றும், தம் திரவிட ஒப்பியல் இலக்கண முகவுரையிலேயே தெளிவாகக்