உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

கூ

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

உறியுள்ள கால்டுவெல் கண்காணியார், மூவேந்தர் குடிப்பெயர்களை வடசொல்லெனக் கொண்டமையினாலேயே, குடவன் குடிப்பெயரை ஆயுமிடத்து, கேரன் என்பதே மெய்பிக்கத்தக்க முந்திய வடிவென்றும், கேரளன் என்பது அதன் வடமொழித்திரிவும், சேரன் சேரல் சேரலன் என்பன அதன் தென்மொழித் திரிவும் ஆகுமென்றும், தமிழிற் ககரம் சகரமாக மெலிந்ததென்றும், அடி சறுக்கிவிட்டனர்.

இச் சறுக்கலைத் துணைக்கொண்டே, "இருக்கு வேதத்தில் (1-115-116) கேலன் என்பவனொருவன் கூறப்படுகின்றான். சாயநர் இவன் அரச னென்றும் இவன் புரோகிதர் அகத்தியரென்றும் கூறுவர்..... அகத்தியரைப் புரோகிதராகவுடைய இருக்குவேதங் குறித்த கேலன் சேரனாவன் என நினைத்தல் தகும். கேலன் கேரனாகி அவனே சேரனாயினான் போலும். கேரலர் என வருதல் காண்க” என எழுதத் துணிந்தார் பெரும் புலவர் ரா. இராகவையங்கார் (தமிழ் வரலாறு, பக். 325-6).

பண்டாரகர் (Dr.) கால்டுவெல், சேரன் என்னும் பெயரின் மெய்ப் பிக்கத்தக்க முந்திய வடிவம் 'கேரன்' என்றும், அச் சொற்றிரிவில் ககரம் சகரமாயிற்றென்றும் மட்டும் சொல்லியிருக்க, இற்றை மேலை மொழி நூல் வல்லார் சிலர், ககரம் சகரமாய்த் திரியுமேயன்றிச் சகரம் ககரமாய்த் திரியா தென்றும், சேரன் என்பது கேரன் என்பதன் திரிபேயென்றும், தேற்றப் படுத்திக் கூறி வருகின்றனர். இது, மாணவரையும் ஆராய்ச்சியில்லா ஆசிரியரையும் மயக்குவதாயுள்ளது.

மேலையாரியத்தில் மட்டுமன்றித் தமிழிலும் திரவிடத்திலுங்கூட, ககரம் சகரமாய்த் திரியக் கூடியதே.

எ-கா:

முழுகு

முழுசு (தமிழ்)

கீரை - சீரை (மலையாளம்)

கெடு - செடு (தெலுங்கு)

இங்ஙனம் திரிவது அருகிய வழக்கே. இதற்கு எதிரான சகர ககரத்திரிபே தமிழிலும் திரவிடத்திலும் பெருவழக்காம். தமிழ் என்பது வட மொழித் துணை வேண்டாத தூய தென்மொழியென்றும், திரவிடம் என்பது தெலுங்கும் கன்னடமும் மலையாளமும் போல வடமொழி கலந்த தென் மொழியென்றும், வேறுபாடறிதல் வேண்டும்.

சகரம் ககரமாய்த் திரிவது, தமிழிலும் திரவிடத்திலும் மட்டுமன்றி, கீழையாரியத்திலும் மேலையாரியத்திலும் இயல்வதே.

தமிழ்

செய் (கெய்) - கை (hand)

செம்பு - கெம்பு.