உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேயும் சேய்மையும்

2. சேய்மை

87

உகரச்சுட்டு உயர்ச்சி குறித்தலை, உக்கம்(தலை), உகள்(குதி), உச்சி- உச்சம், உத்தரம்(மேல்விட்டம், உயரமான வடக்கு), உத்தி (தலையணி), உப்பு (பொங்கியெழு), உம்பு-உம்பர்-உம்பரம், உயர், உவண்-உவணம்-உவணை (மேலிடம், மேலுலகம்), உவர்(உப்பு), உறி, உன்னு(குதித்தெழு) முதலிய சொற்களால் அறியலாம்.

எழு

உகரம் இகரமாகத் திரியும்.

எ-கா: உவர் - இவர். இவர்தல் = உயர்தல், ஏறுதல்.

=

"இவர்பரித் தேரினர்” (சிலப். 5 : 160)

உகரம் எகரமாகவும் ஊகாரம் ஏகாரமாகவும் திரியும்.

எ-கா: உகள்

எகிர்.

ஊர் - ஏர். ஊர்தல் = ஏறுதல், ஏறிச்செல்லுதல்.

ஊர்

ஊர்தி = ஏறிச்செல்லும் விலங்கு அல்லது அணிகம்(vehicle). ஊர் - ஊர்த்தம் = மேனோக்கல், உயர்தல், ஊர்த்தம் - வ. ஊர்த்துவம் (urdhva).

=

ஏர்தல் = எழுதல்.

“உலக முவப்ப வலனேர்பு திரிதரு" (திருமுருகு. 1)

இதனால் எகர ஏகாரங்களும் உயர்ச்சிக் கருத்தை உணர்த்தும்.

எஃகு, எக்கு, எகிர், எட்டு - எட்டம், எடு, எண், எத்து, எம்பு, எவ்வு,

எழும்பு, எற்று முதலிய சொற்களில் எகரமும்; ஏங்கு, ஏண் - ஏணி, ஏணை, ஏத்து, ஏத்தாப்பு, ஏந்து, ஏப்பம், ஏர், ஏல், ஏவு, ஏறு ஏற்றை முதலிய சொற்களில் ஏகாரமும் உயர்ச்சிக் கருத்தை உணர்த்துதல் காண்க.

ஏகாரவுயிர் தன்னளவில் ஓரெழுத்துச் சொல்லாய் நின்றும் உயர்ச்சிக் கருத்தை யுணர்த்தும்.

ஏ = 1. மேனோக்குகை.

66

கார்நினைந் தேத்தரு மயிற்குழாம்" (சீவக. 87)

2. கழுத்தை நிமிர்த்துதல், தலையெடுப்பு.

ஏக்கழுத்தம் என்பது உலக வழக்கு.

66

"காதிரண்டு மில்லாதான் ஏக்கழுத்தஞ் செய்தலும்” (சிறுபஞ். 5)

3. இறுமாப்பு. “ஏக்கழுத்த நாணால்" (பரிபா. 7 : 55).

4. அடுக்கு. “ஏபெற் றாகும்." (தொல். 304). “ஏகல் லடுக்கம்” (நற். 116).

5. உயர்வு, பெருக்கம், மிகுதி.

உயிர்முதற் சொற்கள் ஏதேனுமொரு மெய்யை முன்மிகையாகப் பெறுவது இயல்பு.

எ-கா : இளை-சிளை. சிளைத்தல் = சோர்தல், இளைத்தல்.