உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1

தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை

தொல்காப்பியர் அகத்தியர் மாணவரேனும் தொல்காப்பியத்திற்கும் அகத்தியத்திற்கும் பெரிதும் வேறுபாடுண்டு. மக்களுக்கு அறிவும் ஆற்றலும் ஆயுளும் மிக்கிருந்த அகத்தியர் காலத்து நூல்களில் சுருக்கமாகச் சொல்லப்பட்ட பல இலக்கணங்கள், அவை குறைந்த தொல்காப்பியர் காலத்தில் விரிவாகக் கூறப்பட வேண்டியவாயின. அதற்கென்றே தொல்காப்பியர்,

"தமிழ்கூறு நல்லுலகத்து

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ண

""

வேண்டியதாயிற்று. அல்லாக்கால் அகத்திய முள்ளிட்ட முதனூலாராய்ச் சியே அமைந்திருக்கும். இதுபோதுள்ள இலக்கண நூல்கள் எல்லா வற்றுள்ளும் தொல்காப்பியம் முழுமதி போன்ற ஒரு தனிச் சிறப்பினதேனும் அதனிடத்துள்ள களங்கங்களையும் ‘உண்மை யுரைத்தல்' என்னுமோர் மதம்பற்றி ஈண்டெடுத்துக் கூறுதல் இழுக்காகாது. இஃதோர் அடக்க வழுவமைதி யென்றே கொள்க.

குறிப்புகள் வருமாறு:

1. "சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அஐ ஔஎனும் மூன்றலங் கடையே.

66

சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி

சளிசகடு சட்டை சவளி - சவிசரடு

சந்து சதங்கை சழக்காதி யீரிடத்தும்

வந்தனவாற் சம்முதலும் வை.'

99

என்பது நன்னூல் மயிலைநாதர் உரை மேற்கோள். (நன். 51).

(தொல். எழுத்து. 62)

தமிழில் இதுபோதுள்ள சகரமுதற் சொற்கள் நூற்றுக்கு மேற்படு கின்றன. சொற்களெல்லாம் ஆதியிலேயே அமைந்துள்ளன. ஒலிக்குறிப்புச் சொற்களும் பிற குறிப்புச் சொற்களுமே புதிது புதிதாய்த் தோன்றுவனவாம்.