உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

இலக்கணக் கட்டுரைகள்

சங்கிலி, சந்தம், சலி, சடுதி, துப்பாக்கி, குடாக்கு, கிண்கிணி, சதங்கை, மிருதங்கம் போல்வன ஒலிக்குறிப்புச் சொற்கள் (onomatopoeia). சடை, சருச்சரை, சப்பாணி, பச்சை, மதர்ப்பு, மெத்தை முதலியன பிற குறிப்புச் சொற்கள். ஆங்கிலத்தில் சொற்கள் புதிது புதிதாய்த் தோன்றுகின்றனவே யெனின், அவை பிற மொழிகளினின்றும் கடன் கொண்ட திசைச்சொற்களே யன்றிப் புதுச் சொற்க ளாகாவென மறுக்க. ஒருசார் திரிசொற்களும் (Deriva- tives) புதிதாய்த் திரிக்கப்படுவனவாம். சட்டி, சக்கை, சண்டை, சதை, சப்பு, சமை, சரி, சற்று முதலிய செந்தமிழ்ப் பழஞ் சொற்கள் தொல்காப்பியர் காலத்தில் தமிழிலில்லை யென்று சொல்லுதல் எள்ளளவும் பொருந்தா தென்பது அவற்றின் பொருளை ஆராய்வார்க்கு எளிதிற் புலனாகும்.

66

2. குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின்

ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்

(தொல். எழுத்து. 67)

என ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வாறு குற்றியலுகரம் மொழிக்கு முதலாம் என்றாராலோ வெனின்,

66

'நுந்தை யுகரங் குறுகி மொழிமுதற்கண்

வந்த தெனினுயிர்மெய் யாமனைத்துஞ் - சந்திக் குயிர்முதலா வந்தணையு மெய்ப்புணர்ச்சி யின்றி மயலணையு மென்றதனை மாற்று.

இதை விரித்துரைத்து விதியும் அறிந்துகொள்க மயிலைநாத ருரை. (நன். 51)

3. "மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த

னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப

புகரறக் கிளந்த அஃறிணை மேன

99

என்பது நன்னூல்

(தொல். எழுத்து. 82)

என்று எகின், செகின், எயின், வயின், குயின், அழன், புழன், புலான், கடான் என வரும் ஒன்பதும் மயங்காதனவெனக் கொள்ளின், பலியன், வலியன், வயான், கயான், அலவன், கலவன், கலுழன், மறையன், செகிலன் முதலாயின மயங்கப் பெறாவென மறுக்க” என்பது நன்னூல் மயிலைநாதருரை (நன். 67). 4. “ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் பஃதென் கிளவி ஆய்த பகரங்கெட நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி ஒற்றிய தகரம் றகரம் ஆகும்.

(தொல். எழுத்து. 445)

ஒன்பதிற்கு முதலாவது வழங்கின பெயர் தொண்டு என்பது. தொண்டு + பத்து = தொண்பது - தொன்பது - ஒன்பது. ஒன்பது = 90. எழுபது எண்பது ஒன்பது என்று ஒப்புநோக்குக.