உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை

தொண்டு

+

3

நூறு = தொண்ணூறு = 900. எழுநூறு, எண்ணூறு, தொண் ணூறு என்று ஒப்புநோக்குக.

தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் = 9000. ஏழாயிரம், எண்ணா

யிரம், தொள்ளாயிரம் என்று ஒப்புநோக்குக.

தொண்டு என்னும் பெயர் எங்ஙனமோ தொல்காப்பியர் காலத்தில் உலக வழக்கற்றது. ஆயினும் செய்யுள் வழக்கிலிருந்தது. தொல்காப்பியரே தம் நூலில் தொடைத்தொகை கூறுமிடத்து,

"மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு

தொண்டுதலை யிட்ட பத்துக்குறை எழுநூற்

றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே

என்று கூறியுள்ளார்.

(தொல். 1358)

தொண்டு என்னும் ஒன்றாம் தானப்பெயர் மறையவே பத்தாம் தானப் பெயர் ஒன்றாம் தானத்திற்கும் நூறாம் தானப்பெயர் பத்தாம் தானத்திற்கும், ஆயிரத்தாம் தானப்பெயர் நூறாம் தானத்திற்கும் கீழிறங்கி வழங்கத் தலைப்பட்டன. பின்பு ஆயிரத்தாம் தானத்திற்கு ஒன்பதாயிரம் என்ன வேண்டியதாயிற்று. சொற்படி பார்ப்பின் ஒன்பதினாயிரம் 90 × 1000 = 90000

ஆகும்.

ஒன்று முதல் பத்துவரை ஏனை யெண்ணுப் பெயர்களெல்லாம் தனி மொழிகளாகவும் ஒன்பதுமட்டும் தொடர்மொழியாயு மிருத்தல் காண்க. தொன்பது என்னும் பெயரே முதன்மெய் நீங்கி ஒன்பது என வழங்கும். தெலுங்கில் முதன்மெய் நீங்காது தொனுமிதி எனவே வழங்குகின்றது.

சொற்கள் எங்ஙனம் நிலைமாறினும் புணர்ச்சி செய்யுங்கால் சொற்றொடர்ப்படியே செய்யவேண்டும். அஃதன்றி ஒன்பது + பத்து = தொண்ணூறு, ஒன்பது + நூறு = தொள்ளாயிரம் எனப் புணர்த்து விகார விதியுங் கூறுதல் புணரியலொடு மாறுபடுவ தொன்றாம்.

5. “ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே

இதுவுமது.

முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும் நூறென் கிளவி நகார மெய்கெட ஊஆ ஆகும் இயற்கைத் தென்ப ஆயிடை வருதல் இகார ரகாரம் ஈறுமெய் கெடுத்து மகரம் ஒற்றும்.

99

'நும்மென் ஒருபெயர் மெல்லெழுத்து மிகுமே அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை உக்கெட நின்ற மெய்வயின் ஈவர

(தொல். எழுத்து. 463)

99

(தொல். எழுத்து. 325)