உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

இலக்கணக் கட்டுரைகள்

இய்யிடை நிலைஇ ஈறுகெட ரகரம் நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே அப்பால் மொழிவயின் இயற்கை ஆகும்

99

(தொல். எழுத்து.326)

இவற்றைப் பிரயோகவிவேக நூலார் பற்றுக்கோடாகக் கொண்டு, "இனித் தொல்காப்பியரும், தமிழில் 'எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே' என்றாராயினும், வடநூலில் எழுவாய்வேற்றுமை இவ்வா றிருக்குமென் றறிதற்கு நும் என்னுமொரு பெயரை மாத்திரம் எழுவாய் வேற்றுமை யாக்காது பிராதிபதிக மாக்கி, பின்னர் நும்மை நுங்கண் என இரண்டு முதல் ஏழிறுதியும் வேறுபடுத்து வேற்றுமை யாக்கினாற் போல, 'அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை' என்னுஞ் சூத்திர விதிகொண்டு நீயிரென வேறுபடுத்து, எழுவாய்வேற்றுமை யென்னும் பிரதமாவிபத்தி யாக்குவர். இவ்வாறு நின், தன், தம், என், எம், நம் என்பனவற்றையும் பிராதிபதிகமாக்கி, பின் நீ, தான், தாம், யான், யாம், நாம் எனத் திரிந்தனவற்றை எழுவாய்வேற்றுமை யாக்காமையானும், 'எல்லா நீயிர் நீ' எ-ம். 'நீயிர் நீயென வரூஉங் கிளவி' எ-ம் பெயரியலுள் பெயர்ப் பிராதிபதிகமாகச் சூத்திரஞ் செய்தலானும், 'அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை' என்னுஞ் சூத்திரத்தை வடமொழிக்கு எழுவாய்வேற்றுமை இவ்வாறிருக்குமென்று தமிழ்நூலார் அறிதற்கே செய்தாரென்க. நிலைமொழி விகாரமொழி எட்டாம் வேற்றுமை யானாற்போல நும்மென்னு நிலைமொழி விகாரம் முதற் வேற்றுமையா மென்க” எனக் கூறியுள்ளார் (பிர. சூ. 7, உரை).

நீயிர் என்னும் முன்னிலைப் பன்மைப்பெயர் வேற்றுமைப்படும் போது நும் என்று திரியுமேயன்றி, நும் மென்னும் வேற்றுமைத் திரிபு பெயர் நீயிரென்று திரியாது.

முன்னிலைப் பெயர்கள்

நீன் - நீ

நீம்

நீம் + கள்

=

நீங்கள்

நீ + இர் = நீயிர், நீவிர் - நீர்

வேற்றுமைத் திரிபு

நின் - நுன் - உன் நும் - உம்

நுங்கள் - உங்கள் நும் உம்

நீன் என்னும் பெயரே நீ என்று குறைந்து வழங்குகின்றது. நீன் என்னும் வடிவை இன்னும் தென்னாட்டுலகவழக்கிற் காணலாம். தான் என்பது தன் என்று குறுகினாற்போல, நீன் என்பது நின் என்று குறுகும். நீன் என்பது இலக்கண வறியாமை காரணமாகக் கொச்சையாகக் கருதப்படு கின்றது. நீனுக்குப் பன்மை நீம் என்பது. மகரம் பன்மைப் பொருளுணர்த் தலை ஆங்கில இலக்கண நூல்களிலும் காணலாம். நீங்கள் என்பது விகுதிமேல் விகுதி பெற்ற இரட்டைப் பன்மை. நீவிர் என்பது இலக்கணப் போலி. நீயிர் என்னும் சொல்லே நீர் என இடைக்குறைந்து நின்றது. இங்ஙனமன்றி நும் என்பது நீயிர் எனத் திரியுமென்றல் ஒன்பது + பத்து = தொண்ணூறு என்றதனோ டொக்குமென்க.