உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை

66

7. 'இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்

றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.

""

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.

5

(தொல். சொல். 397)

(தொல். சொல். 401)

இச் சூத்திரங்களால் மொழியாராய்ச்சி சிறிது முட்டுப்படுகின்றது.

வடசொற்கள் தொல்காப்பியர் காலத்து நூல்களில் வழங்கினவாகத் தெரியவில்லை. தொல்காப்பியத்தில் வடசொல்லென் றையுறக் கிடக்கும் சில சொற்கள் செந்தமிழ்ச் சொற்களே. இடப்பெயரும் இயற்பெயருமான சில வடசொற்களே வடவெழுத் தொருவியும் ஒருவாதும் வழங்கியிருத்தல் வேண்டும். அல்லாக்கால் தென்சொற்களே வடசொற்களாகத் திரிபுணர்ச் சியாற் கருதப்பட்டிருத்தல் வேண்டும். தொல்காப்பியர் சுருக்கமாகக் குறித்துள்ள வடசொல்லைப் பவணந்தியார் விரிவாகக் கூறிவிட்டனர். வடசொல்லாகாத் தென்சொற்கள்

ஐயன் : தந்தையைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்; அரசன், ஆசிரியன், தந்தை, அண்ணன் என்னும் நாற்குரவரையுங் கடவுளையும் அந்தணனையும் முனிவனையும் பெரியோனையும் பொதுவா யுணர்த்துவது; என்பதின் சிதைவன்று. பெண்பால் ஐயை.

ரியன்

ஆசிரியன் : ஆசு + இரியன். ஆசு = குற்றம், இரிதல் குற்றம், இரிதல் = போக்குதல். அந்தணன் :"அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்”

இராவணன் : இராவண்ணன். இரா = இருள் = கருமை.

(குறள். 30)

"இருள்நிறப் பன்றியை ஏன மென்றலும்"(தொல்.பொருள். 613)

=

கும்பகர்ணன் : கும்பகன்னன். கன்னம் = காது.

இராக்கதன் : இரா + கதன்; கதி + அன் = கதன்.

+

கதி = செலவு; இரவில் செல்லுபவன்; இதே பொருளில் நிசாசரன் என்பர் வடமொழியில். நிசி = இரவு; சரம் = செலவு. இராக்கதன் - இராக்கன் - அரக்கன். ராக்ஷஸன் என்பதன் திரிபன்று. அரக்கன் என்பதற்கு அழிப்பவன் என்றும் பொருள் கூறலாம்.

இத்துணையும் சில மாதிரிக் கெடுத்துக் கூறப்பட்டன. இங்ஙனமே ஏனையவும். இவற்றின் விரிவை யெல்லாம் எமது 'முதற்றாய்மொழி'யிற் கண்டுகொள்க.

1. "உச்ச காரம் இருமொழிக் குரித்தே.'

99

(தொல் எழுத்து. 42)

உசு, முசு என்ற இரு சொற்களே யன்றி, பசு, கொசு முதலிய பிறவும் உச்சகார வீற்றுச் சொற்களாதல் காண்க. பசுவென்பதை ஆரியச் சிதை வென்பர் நச்சினார்க்கினியர். அது அஃதன்று.