உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

இலக்கணக் கட்டுரைகள் தோன்றவில்லை. அவை அங்ஙனமிருப்பின், ஒன்றாயிருக்கும்; அல்லது இணைக்கப்பட்டிருக்கும்.

இனி, அதிகார முறையில், அரசியலார் பாடப்புத்தகக் குழுவும், பல்கலைக்கழகத் தமிழ்ப்பாடக் குழுவும் உள்ளன. இவற்றால் ஒப்பம்பெறும் புத்தகங்கள் சிலவற்றில் எழுத்துப் பிழை, சொற்பிழை, இலக்கணப்பிழை இருப்பினும் இருக்கும்.

இங்ஙனம், தமிழ்ப்புலவர் குழாங்கள் பல்வேறுபட்டுக் கிடப்பதாலும், தமிழ்ப்புலமையும் தமிழ்ப்பற்றும் இல்லாதாரும் பல தமிழ்ச்சங்க வுறுப்பினராயிருப்பதாலும், சில தமிழ்ப் பெரும்புலவர் ஒரு சங்கத்திலும் சேராதிருப்பதாலும், குற்றம்பட நூலியற்றுவாரைக் குட்டுதற்கும் வெட்டு தற்கும் ஒருவருமின்மையாலும்; வரிவடிவை மாற்றுவாரும், புணர்ச்சியைத் திரிப்பாரும், செய்யுள்களைக் களைவாரும், அயலெழுத்தையும் சொல்லை யும் புகுத்துவாரும், பாடவேறுபாடு செய்வாரும், தன்சொல்லை அயற் சொல்லாகக் காட்டுவாரும், முதனூலை வழிநூலாக்குவாரும், சொல்லுக்கும் செய்யுட்கும் ஒவ்வாத பொருள் கூறுவாருமாய்; 'பல்குழுவும் பாழ்செயும் உட்பகையும் கொல்குறும்பும்' தமிழுக்குத் தோன்றியுள்ளன. இங்ஙனம் ஆளாளுக்கோர் அம்பலம் பண்ணுவதால், தமிழை மரபுநெறி வழாது வளர்த்தற்கில்லை. சில தான்றோன்றித் தம்பிரான்மார் தமக்குச் சற்று அரசியலதிகாரம் வாய்த்தவுடன், 'நாதையற்ற கோவிலுக்கு நான்தானடா பூசாரி' என்று சில குழுக்களைக் கூட்டிச் சில நிதிகளையும் திரட்டித் தமக்குப் பேரும் புகழும் வருவதையே பயனாகக்கொண்டு, பல தமிழ்த் தளர்ச்சி வேலைகளைச் செய்துவருகின்றனர்.

திருக்குறளைப் புறக்கணிப்பவரும் தமிழ்ப்புலவரைப் பழிப்பவரும் கூடத் தமிழ்த்தலைவராய்க் கிளர்ந்தெழுவது விந்தையினும் விந்தையே! இருவகை யதிகாரம்

அறிவதிகாரம்(Literary Authority), ஆட்சியதிகாரம்(Administrative Authority) என அதிகாரம் இருவகைத்து. இவற்றுள், அறிவதிகாரம் கல்வியால் தானாய் வருவது; நிலைத்தது: ஆட்சியதிகாரம் பிறர் அமர்த்தத்தால் அல்லது தேர்தலால் வருவது; நிலையற்றது. அறிவதிகாரி ஆட்சிவகையில் ஆட்சியதிகாரிக்கு எங்ஙனம் அடங்குதல் வேண்டுமோ, அங்ஙனமே ஆட்சியதிகாரியும் அறிவுவகையில் அறிவதிகாரிக்கு அடங்குதல்வேண்டும். இது என்றும் செல்லும் உலகப் பொதுவிதி, அறிவதிகாரிகளெல்லாம் ஆட்சியதிகாரிகளாக இருக்க முடியும்; ஆயின் ஆட்சியதிகாரிகளெல்லாம் அறிவதிகாரிகளாக இருக்க முடியாது.

ஆங்கிலத் தமிழ்ச் செய்தித்தாளாசிரியர் ஏற்றத்தாழ்வு

மேல்நாட்டிலும் கீழ்நாட்டிலும் ஆங்கிலச் செய்தித்தாளாசிரிய ரெல்லாரும் சிறந்த இலக்கிய அறிஞர்; அல்லது குறைந்த பக்கம் நல்ல