உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

தமிழ் எழுத்து மாற்றம்

விடுதலைபெற்ற இந்தியாவில், இந்தியாவில், தமிழ்நாடு போம்போக்கும் தமிழ்ப்புலவர் போம்போக்கும் தமிழாக்கத்திற் கேதுவாய்த் தோன்றவில்லை. தமிழதிகாரம் மெல்லமெல்லத் தமிழறியாத பெருமாளர் கைக்கும் தமிழ்ப் பகைவர் கைக்கும் நழுவிக்கொண்டிருக்கின்றது. “ஊருக் கிளைத்த வன் பிள்ளையார் கோயி லாண்டி” என்பதுபோல், தமிழும் தமிழ்ப் புலவரும் எவராலும் எங்ஙனமும் மாற்றப்படற் குரியராயினர். தமிழைப் பல துறையிலும் மாற்றுவதற்கே எல்லோரும் முழுவுரிமை எய்தியுள்ளனர். தமிழ் வளர்ப்பிற்கு ஒரு பொதுக்கழகம் இல்லாமை

பண்டைக்காலத்தில் பாண்டிநாட்டுத் தமிழ்க்கழகம் ஒன்றே தமிழகம் முழுமைக்கும் பொதுவாயிருந்து, குல மத வேறுபாடற்றுத் தமிழாக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, முதுநூலாராய்ச்சியும் புதுநூலாக்கமு மாகிய இருவகைத் தொண்டாற்றி, தொல்லாசிரியர் நல்லாணை வழியே எவ்வகையிலும் எள்ளளவும் தமிழ்மரபு கெடாது, தமிழை வளர்த்து வந்தது. தமிழகத்திலுள்ள பெரும்புலவர் எல்லாரும் அதில் சேர்ந்திருந்தனர். பரிசளிப்பு முறையில் பாண்டியர் அவரைப் போற்றி வந்தனர். ஆரியம் தமிழகத்து வேரூன்றும்வரையும், பாண்டியர் தொன்று தொட்டுக் கழகம் நிறுவித் தமிழை வளர்த்துவந்ததாகத் தெரிகின்றது. கடல்கோள்களால் நேர்ந்த டவேறுபாட்டால் கழகம் மூன்றெனப்பட்டதே யன்றி, அதன் குலைவால் நேர்ந்த இடையீட்டாலன்று. மொழியும் இலக்கியமும் பற்றிய முழு அதிகாரமும் கழகத்திற்கே இருந்தது.

தற்காலமோ, அதிகாரமற்ற முறையில், தமிழை வளர்த்தற்கோ தளர்த்தற்கோ, 'மதுரைத் தமிழ்ச்சங்கம்' என்றும், 'கரந்தைத் தமிழ்ச்சங்கம்' என்றும், ‘நெல்லைத் தமிழ்ச்சங்கம்' என்றும், 'சென்னைத் தமிழ்ச்சங்கம்’ என்றும், பிறவாறும், பற்பல சங்கங்கள் தோன்றி வெவ்வேறு கொள்கையுங் கோட்பாடுங் கொண்டு, ஒவ்வாத முறையில் பற்பல வினைகளும் வேலைகளும் செய்துவருகின்றன. இவை போதாவென்று இன்று 'தமிழ் வளர்ச்சிக் கழகம்' என்றும் ஒன்று தோன்றியுள்ளது. இவற்றின் தொழில்களை நோக்குங்கால், குல மத கட்சிச் சார்பான தமிழ்ச் சங்கங்களாய்த் தோன்று கின்றனவே யொழிய, எல்லார்க்கும் பொதுவான தமிழ்ச்சங்கங்களாய்த்