உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

இலக்கணக் கட்டுரைகள் கீழும் சேர்த்தெழுதுங் கூட்டெழுத்துகள் இடத்தை அடைப்பன, மொ, மோ, யி, யீ, யொ, யோ, ஹொ, ஹோ ஆகிய உயிர்மெய்யெழுத்துகள் ஏனைய வற்றினும் வேறுபட்ட உயிர்க்குறி யுடையன. உயிர்மெய் வரிகள் (35 × 35) 455. இவையல்லாது, 'நகாரப்பொல்லு' என்னும் ஒரு தனி னகரமெய் வரியும், ‘பண்டிர’ அல்லது 'சகட்டிரேப்ப' என்னும் றகரமெய்யும், ஒரு மெய்க்கு அல்லது உயிர்மெய்க்குப்பின் எழுதி முன் பலுக்கப்பெறும் 'வெலப்பல கிலக’ என்னும் ரகரவரியும் உள்ளன.

கன்னட அரிவரி தெலுங்கரிவரியைப் பின்பற்றியதாதலின், அதிலும் இத்தகைய குறைபாடுண்டு. கன்னட உயிர்மெய்வரிகள் (34 × 14) 476.

மலையாள அரிவரியில், (குற்றியலுகர) லு, ஞ என்னும் ஈரெழுத்தும் kh, ch, p, v ஆகிய நாலெழுத்தும், மயக்கத்திற்கிடமாவன. கு, கூ என்னும் ஈரெழுத்தும் நுணுக்கெழுத்தில் கூர்ங்கண்ணருக்கன்றி வேறுபாடு தெரியா. உகர ஊகாரமேற்ற உயிர்மெய்கள் ஓரியல் (uniform) வடிவு கொண்டன வல்ல. முன்னும் பின்னும் கீழும் மேலும் சேர்த்தெழுதும் கூட்டெழுத்துகள் க்கு மேற்பட்டன. இவற்றுட் சிலவற்றுக்கேனும் தனி அச்சுருக்கள் வேண்டும். ch, b, y, v ஆகிய நாலெழுத்தும் இரட்டிக்கும் கூட்டெழுத்து களில் கீழெழுத்து ஒன்றாகவே இருக்கும். உயிர்மெய் வரிகள் (36 × 16) 576.

300-

தமிழிலோ ஒவ்வோர் எழுத்தும் எளிதாய் வேறுபடுத்தறியக்கூடிய தனி வடிவுள்ளது. மெய்கள் பதினெட்டே. இதனாலும், கூட்டெழுத்தின்மை யாலும் தமிழெழுத்துத் தொகை பிற இந்திய மொழியெழுத்துத் தொகை யினும் எத்துணையோ குறைகின்றது. உயிர்மெய்வரிகள் (18 × 12) 216. ஆய்தம் ஒன்று. ஆக, தமிழெழுத்துகள் மொத்தம் 247தாம்.

சில உயிர்மெய்வரிகள் தமிழில் ஓரியல் வடிவு கொண்டனவல்ல வெனின், இக் குறைபாடு தெலுங்கு கன்னட மலையாளத்திலும் உள்ளதே! அதற்கென் செய்வது?

உருதுவிற்குரிய பாரசீக-அரபி யரிவரியில் உயிர்மெய் வரிகள் இல்லாவிடினும், பலவெழுத்துகள் ஒரே வடிவுகொண்டு மேற்கீழ்ப் புள்ளித்தொகை வேறுபாட்டாலேயே வேறுபடுக்கப்படுகின்றன. பெரும் பாலும், ஒவ்வோரெழுத்திற்கும் சொல்லின் முதலிடை கடைக்குரிய மூவேறு வடிவுண்டு. யகரவரி இகரத்தையும், வகரவரி உகரத்தையும் குறிக்கின்றன.

நுணுக்கியும் நெருக்கியும் அழகாகவும் தெளிவாகவும் மணிபோல் எழுதப்பெறும் எழுத்துகளுள் தலைமையானது ரோம (Roman) எழுத்து. அதற்கடுத்தது தமிழே. தமிழ் எழுத்து வடிவை மாற்றினால், பல இன்னலும் அழகிழப்பும் நேரும்.

பிறமொழி யெழுத்துகளில் எத்துணையோ குறைபாடிருக்கும்போது, அவற்றையெல்லாம் கவனிக்காமல் தமிழெழுத்தை மட்டும் மாற்றுவது எற்றுக்கு? மேலும், ஒரு அல்லது சில செய்தித்தாளில் எழுத்தை மாற்ற