உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் எழுத்து மாற்றம்!

103

விரும்பின், அதுபற்றிப் பாடப்புத்தகங்களிலும் இலக்கியத்திலும் ஏன் மாற்றவேண்டும்? ஏற்கெனவே தமிழெழுத்துப் பலமுறை தகுந்த முறையில் சீர்திருத்தப் பெற்றே இற்றை வடிவெய்தியுள்ளதென்பதை, தமிழ் எழுத்து மாற்றக் கோட்பாட்டினர் அறிவாரா? அவர் விரும்புவது சீர்திருத்தமா? அல்லது (சீர்கேடான) மாற்றமா?

தமிழெழுத்தில் செய்யவேண்டிய திருத்தம்

தமிழெழுத்தில் இப்போது செய்யவேண்டிய திருத்தம் இரண்டே. ஒன்று ‘ஈ'யை நீக்கி யை வைத்துக்கொள்வது; இன்னொன்று ஒளகார உயிரிலும் அதனையேற்ற உயிர்மெய்களிலும் ‘ௗ' வரியைச் சற்றுச் சிறிதாக்குவது. வரிதான் முதலாவது இருந்தது. பின்பு இடைக்காலத்தில் அது விலக்கப்பட்டுக் கிரந்த வரியாகிய 'ஈ' புகுத்தப்பட்டது. ஔகார வரியிலுள்ள ‘ௗ' வரியும் 'ஊ' வரியிற்போல் முதலாவது சிறிதாகவே யிருந்து பிற்காலத்தில் தவறாகப் பெரிதாக எழுதப்பட்டது.

தமிழ்ப்புலவர் செய்த தவறு

இந் நூற்றாண்டில் எழுத்துப்பற்றித் தமிழுக்கு இருவகையில் ஊறு நேர்ந்தபோது தமிழ்ப்புலவர் தடுத்திலர். ஒரு மொழியில் பல கருத்துகட்கும் சொல்லிருக்கும்போது, அவற்றுக்குப் பதிலாகப் பிறமொழிச் சொற்களை யும், எழுத்துகளையும் வேண்டாது புகுத்துவது, ஒரு மொழியைக் கெடுக்கும் வழியாகும்.

தமிழில் ஒரே யுயிர்கொண்ட உயிர்மெய் வரிகளெல்லாம் ஓரியல் வடிவுகொண்டிருத்தல் வேண்டுமென்பது திருந்திய கருத்தன்று. எடுத்துக் காட்டாக ஐகார உயிர்மெய்களை எடுத்துக்கொள்ளின், அவை ஓரியல் வடிவுகொண்டிராமைக்குத் தகுந்த காரணமுண்டு. என்பதற்குப் பதிலாக ‘னை' என்று எழுதின், கூட்டெழுத்தாயெழுதுங் கையெழுத்தில் அது இரு னகரம்போல் தோன்றும். இம் மயக்கத்தை நீக்குதற்கே, ஐகார வுயிர்க்குறி, பல சுழிகளும் வளைவுகளுங் கொண்ட எழுத்துகட்கெல்லாம் மேலிடப் பெற்றுள்ளது. இங்ஙனமே ஆய்ந்து நோக்கின், ஓரியல் வடிவு பெறாத பிற உயிர்மெய் வரிகட்கும் காரணம் தோன்றும். அச்சுவடிவு ஒன்றையே கவனித்துக் கையெழுத்து வடிவை நோக்காதவர்க்கே, தமிழ் உயிர்மெய் வரிகள் ஒழுங்கில்லாதனவாகத் தோன்றலாம். கையெழுத்தும் முக்கியம்; ஆங்கிலத்தில் அதனையும் அச்சு வடிவில் அமைத்திருக் கின்றனர்.

ெ' என்னும் பழைய ஐகார வுயிர்மெய்க் குறியை ை என்று இணைத்தும், கு ஙு சு ஞுடுணு முதலிய உயிர்மெய் வரிகளை ஒரே முறையில் வரையும் ஒற்றைக் குறியாகவும் எழுதுவதெல்லாம் எளிமையும் தெளிவும் மட்டுமன்று, காலச் சிக்கனமும் பற்றியதாகும். ஆதலால், எவ்வகையிலும் (மேற்காட்டிய இரு வரிகளையன்றி) மாற்றம் செய்யத்

ரு