உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

இலக்கணக் கட்டுரைகள்

தேவையில்லை. புதிய எழுத்துமாற்றம் செய்தித்தாள்கட்கு இன்றியமையாத தாயின், அவைமட்டும் அதை ஆளட்டும். ஏனையர்க்கு வேண்டா.

இன்று செய்ய வேண்டியது

புதிய எழுத்து மாற்றம் புகுத்தப்படின், பல்கலைக்கழகப் பாடப் புத்தகக் குழுவையும், தனிப்பட்டவர்க்கும் பொதுமக்கட்குமுரிய எல்லா நூல்நிலையங்களையும், தமிழ்நூல் வெளியீட்டாளரையும், தமிழ்ச் சங்கங் களையும், பலவகை ஆவணங்களையும், மாணவரையும், தாக்கிப் பல இடர்ப்பாட்டை விளைவிக்கும். ஆதலால், இதைப் புகுத்தாதவாறு அரசிய லாரை வேண்டிக்கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணத் தமிழர் புதிய எழுத்துமாற்றத்தை ஒப்புக்கொள்ள வில்லை யென்றும், பழைய எழுத்தையே கடைப்பிடிக்கத் தீர்மானித்துள்ள னர் என்றும் சொல்லப்படுகின்றது. தமிழ்ச்சொற்களைப் போன்றே தமிழ் எழுத்தையும் தூய்மையாகப் பேணத் துணிந்த யாழ்ப்பாணம் தழைத் தோங்க!

"செந்தமிழ்ச் செல்வி" நவம்பர் 1951