உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

இலக்கணக் கட்டுரைகள் என்று தெள்ளத் தெளிவாகப் பாடிவைத்திருக்கின்றார். இது உண்மை நவிற்சியே யன்றி உயர்வு நவிற்சியன்று.

குமரிமுனைக்குத் தெற்கே மடகாசுக்கர்த் தீவுவரை பரவியிருந்த பழம்பாண்டி நாடான குமரிக்கண்டம் முழுதும் மூவேறு கடல்கோள்களால் முழுகிப் போனமையாலும், முதலிரு கழகப் பல்துறையிலக்கிய விலக்கணப் புலவிய மனைத்தும் இயற்கையாலுஞ் செயற்கையாலும் அழியுண்டமை யாலும், தமிழின் தொன்மையை ஆழ்ந்த மொழியாராய்ச்சியின்றி அறிய வியலாவாறு, மொழியொழிந்த பிற சான்றுகளெல்லாம் முற்றும் இறந்து பட்டன என்பதை, இற்றைத் தமிழ்ப் புலவர் முதற்கண் அறிதல் வேண்டும். ஆகவே, தொல்பொருட் கலை (Archaeology), ஆரியர் வருகைக்கு முற்பட்ட பழந்தமிழக வரலாற்றிற்குப் பயன்படா தென்பதைத் தமிழ்நாட்டு வரலாற்றுத் துறைத் தலைவரும் கல்வெட்டுத் துறைத் தலைவரும் தொல் பொருளாராய்ச்சித் துறைத் தலைவரும் அறிதல் வேண்டும்.

தமிழ் தென்னாட்டு மொழியா நண்ணிலக் கடற்கரை மொழியா என்றும், குமரிநில மொழியா இற்றைநில மொழியா என்றும், திரவிட மொழிகட்குத் தாயா உடன்பிறப்பா என்றும், ஆரிய மொழிக் குடும்பத்திற்கு மூலமாக வுள்ளதா இல்லதா என்றும், தமிழன் பிறந்தகமும் மாந்தன் பிறந்தகமும் ஒன்றா வேறா என்றும், மொழி நூல் வரலாறு மாந்தனூல் ஆ முத்துறையிலும், நடுநிலையுடனும் பொறுமையுடனும் நீண்டகால ஆராய்ச்சி செய்தாலன்றி, தமிழின் தொன்மை முன்மை தாய்மை தலைமை முதலிய தன்மைகளை முற்றும் அறியமுடியாது.

கிய

தொல்காப்பியம், முதலிரு கழகமும் இருந்த பழம் பாண்டிநாடு முழுதும் முழுகிய பின்பும், ஆரியப் பூசாரியர் தென்னாடு வந்து ஆரியச் சொற்களும் கருத்துகளும் தமிழிலக்கியத்திற் புகத் தொடங்கிய பின்பும், வைகை மதுரையும் கடைக்கழகமும் தோன்றுமுன் கி.மு. 7ஆம் நூற்றாண்டில், பாண்டியன் வயப்பட்ட தென் சேரநாட்டில் தோன்றிய பன்மாண் சார்பிற் சார்பான தொகுப்பு நூலாதலின், அதனையே முதனூலாகக் கொண்டு அது தோன்றிய காலமே தமிழிலக்கியப் பொற்காலமென்று கூறுவது, ஒரு பெருங்கோவிலின் திருவுண்ணாழிகையையும் இடை மண்டபத்தையும் முகமண்டபத்தையும் பாராது, கொடிக்கம்பத்தடியிலுள்ள சிற்றுருவத்தையே கோயிற்படிமையாகக் கருதித் தொழுவது போன்றதே.

"செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்

புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்”

என்று பனம்பாரனார் கூறியதும்;

“எழுத்தெனப் படுப முப்பஃ தென்ப”

என்று எழுத்ததிகாரத் தொடக்கத்திலும்,