உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் நெடுங்கணக்கு

111

ரேலியர்க்கும் சீனருக்கும் இருந்த உறவைக் காட்டுகின்றன. கால்டுவெல் திரவிட ஒப்பியல் இலக்கணம் (சென்னைப் பதிப்பு) 361 ஆம் பக்கம் பார்க்க.

எ-டு :

தமிழ்

ஏன், யான், நான்

நீன், நீ

நீம், நீயிர், நீவிர், நீர்

தமிழ்

நான், நாம்

நீன் - நீ, நீம்

தான், தாம்

ஆத்திரேலியம்

nga, ngali, ngatsa, nganya ninna, nginne, ngintoa, ningte nimedoo, nura, niwā, ngurle

சீனம்

ngo wo; womēn

ni, nimēn

ta, tamēn

நகரம் ஞகர மகரமாகவும், மகரம் வகரமாகவும், திரிதல் இயல்பே. தன்மைப் பன்மைப் பெயர் ஆங்கிலத்தில் `we' என்றும் வடமொழியில் வயம் என்றும் திரிந்திருத்தல் காண்க.

'மேன்' (mēn) என்பது சீனத்தில் வகுப்பைக் குறிக்கும் தொகுதிப் பெயர். அது மன் என்னும் தென்சொல்லோடு தொடர்புடையதாயிருக்கலாம். மந்து மந்தை. மன்னுதல் = கூடுதல், மிகுதல்,

மன் - மன்று

பெருத்தல்.

ஐம்பாற் படர்க்கைச் சுட்டுப் பெயர்கள் தோன்றுமுன் தான் தாம் என்பன படர்க்கைச் சுட்டுப் பெயர்களாகவே யிருந்தன.

பர். (Dr.) (N.) இலாகோவாரி (Lahovary) தம் 'திரவிடத் தோற்றமும் மேற்கும்' (Dravidian Origins and the West) என்னும் ஒப்பியன் மொழிநூலில், தமிழொடு தொடர்புள்ள மேலையாசிய மேலையைரோப்பிய இடப் பெயர்கள், பூதப் பெயர்கள், மக்கட் பெயர்கள், உறவுப் பெயர்கள், பல்வகை உயிரினப் பெயர்கள், நிலைமைப் பெயர்கள், பல்வேறு வினைச்சொற்கள், பெயரெச்சங்கள் முதலிய நூற்றுக்கணக்கான சொற்களின் மூலத்தை அறியாது, அவற்றைத் தம் கொள்கைக்குச் சான்றுபோல் எடுத்துக் காட்டி, உண்மையில் தம் கொள்கையைத் தாமே மறுத்திருக்கின்றார்.

எ-டு: மல்=வளம். மல்-மல்லல்=வளம். "மல்லல் வளனே” (தொல். உரி.7). மல்-மலை= இயற்கை வளம் மிக்கது. “வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே” (நன்.பாயி.28). இப் பொருளை மேலை மொழிகளிற் காண முடியாது, இங்ஙனமே ஏனையவும்.

`Compare Cymri (Wales). 'It is stated that the original home of the Cwmry, Cumri, or Cymry was in Southern Hindustan, the Southern extremity of which Cape Comorin, takes the name from the same root" - From a Historical Souvenir issued on the occasion of the meeting of the British Medical Association at Swansea, 1903-Editors."-