உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

இலக்கணக் கட்டுரைகள்

A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages, Third Edition, Introduction, p., foot-note

பேரா. V.R. இராமச்சந்திர தீட்சிதரின், Origin and Spread of the Tamils, Pre-Historic South India என்னும் வரலாற்று நூல்களைப் பார்க்க.

தமிழன் பிறந்தகமே மாந்தன் பிறந்தகம்

"ஏதேன் தோட்டத்தை (மாந்தன் பிறந்தகத்தை) மடகாசுக்கர்த் தீவின் பாங்கர்க் காணவேண்டும்” என்பது எக்கேல் (Ernest Haeckel) கூற்று- History of Creation.

கென்யாவிற் (Kenya) கண்டெடுக்கப்பட்ட மாந்தன் மண்டையோடு இதுவரை கண்டவற்றுள் மிகப் பழைமையானதா யிருக்கலாம் என்பது, இலீக்கி (Richard Leakey) என்னும் ஆங்கில மாந்தனூலாராய்ச்சியாளர் கருத்து.

மடகாசுக்கர் மட்டத்திற் சற்றுக் கிழக்கே தள்ளியிருந்ததே தமிழன்

பிறந்தகம்.

‘பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி.”

தமிழ் எழுத்துத் தோற்றக் காலம்

(சிலப். 11: 19-22)

தலைக்கழகத் தோற்றம் கி.மு. 10,000 ஆண்டுகட்கு முந்தியது. அதற்குமுன் மூவதிகார இலக்கணமும் வகுக்கக் கால்நூற்றாண்டேனுஞ் சென்றிருத்தல் வேண்டும். இலக்கணத்திற்கு முன் பல்துறை இலக்கியம் தோன்ற அரை நூற்றாண்டு சென்றிருக்கும். அதற்குரிய எழுத்துத் தொகுதி அல்லது வண்ணமாலை, படவெழுத்து, கருத்தெழுத்து, அசையெழுத்து, ஒலியெழுத்து என்னும் நால்நிலை கடந்து திருந்திய நிலைபெறக் கால் நூற்றாண்டாயிருக்கும்.

இலக்கிய விலக்கணப் புலவியம் பனையேட்டில் எழுத்தாணி கொண்டு சுழித்துக் கீச்சி எழுதப்பட்டது. ஏட்டின் இடப்பக்கம் (அடிப்பக்கம்) அகன்றும் வலப்பக்கம் (நுனிப்பக்கம்) சிறுத்தும் இருப்பதனால், இடம் வலமாக எழுதப்பட்டது. பட்டவன் பீடு கல்லிலும், வேந்தன் பட்டயம் கல்லிலும் செம்பிலும், பொறிக்கப்பட்டன. ஏட்டெழுத்து வளைகோடும் வெட்டெழுத்து நேர்கோடும் மிக்கிருப்பதே இயற்கை.

உயிரும் மெய்யும் மட்டும் உள்ள வண்ணமாலை குறுங்கணக்கு என்றும், உயிர்மெய்யொடுங் கூடியது நெடுங்கணக்கு என்றும், பெயர் பெற்றன. பிறநாட்டு வண்ணமாலைகளெல்லாம் குறுங்கணக்கே. அதோடு உயிர், மெய், உயிர்மெய்; குறில், நெடில்; வலி, மெலி, இடை, என்னும்