உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் நெடுங்கணக்கு

115

தி. நா. சு. வின் பண்டைத் தமிழெழுத்துகளை நம்பி, தமிழறியாத சிலர் எழுத்துச் சீர்திருத்தம் என்று எழுத்துச் சீர்கேடான வரிவடிவுகளை வெளியிட்டிருப்பது, எள்ளி நகையாடத் தக்கது. '1' என்னும் ஒற்றை நேர் கோட்டினின்று திடுமென்று முச்சுழி 'ண' தோன்றியதென்றும், ஆய்த முப் புள்ளியினின்று 'இ' தோன்றிய தென்றும் காட்டியிருப்பதை நம்புவார், கடுகளவும் பகுத்தறி வுள்ளவராகார்.

வரலாற்றின் மாறாத்தன்மை

மக்கள் விரும்பின், மறைநூல்களையும் மாற்றலாம். ஆயின், உண்மையான வரலாற்றை எல்லாம் வல்ல இறைவனும் மாற்ற முடியாது. மாற்றின், மெய்யனான இறைவன் பொய்யனாகித் தன் இறைமையை முற்றும் இழந்துவிடுவான்.

"செந்தமிழ்ச் செல்வி" சனவரி 1979