உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

இலக்கணக் கட்டுரைகள்

இம் மூன்றே முதன்முதல் மாந்தன் வாயிலும் தமிழன் வாயிலும் பிறந்த உயிரெழுத்துகள். இவையே, ஆரியமொழிக ளெல்லாவற்றிலுமுள்ள சுட்டுச் சொற்களின் அடிவேர்கள்.

ஈ - ஏ, இ-எ.

+

ஓ, உ-ஒ.

=

ஐ. அ + உ ஒள

ஐ, ஒள இரண்டும் புணரொலிகள் (diphthongs).

Ce

அகர இகரம் ஐகார மாகும்.'

அகர உகரம் ஔகார மாகும்."

ce

ஆஈ ஊஏ ஐஓ ஔஎனும்

அப்பால் ஏழும்

ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப."

(தொல். 21)

(60g. 22)

(தொல். எழுத்து. 4)

வை தொல்காப்பியர் வகுத்தன வல்ல. “நூன்மரபு” என்னும் இயற்பெயரை நோக்குக. “மொழிமரபு”, “தொகைமரபு”, என்னும் இயற்றலைப்புகளையும் நோக்குக.

'நூன்மரபு' முதல் 'மரபியல்' வரை தொல்காப்பியம் முழுதும், முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத்தவையே.

"ஐவியப் பாகும்.”

‘ஈரள பிசைக்கும் இறுதியி லுயிரே ஆயியல் நிலையுங் காலத் தானும் அளபெடை நிலையுங் காலத் தானும்

அளபெடை யின்றித் தான்வருங் காலையும் உளவென மொழிப பொருள்வேறு படுதல்

குறிப்பின் இசையான் நெறிப்படத் தோன்றும்."

(தொல். சொல். 385)

தொல். சொல். 766)

(சேனா. உரை) 'ஔஔ வொருவன் றவஞ்செய்த வாறு என்றவழிச் சிறப்புத் தோன்றும். ஒரு தொழில் செய்வானை ஔஒள வினிச்சாலும் என்றவழி மாறுபாடு தோன்றும். ஒளஉ வொருவ னிரவலர்க் கீந்தவாறு, ஔஉ வினிவெகுளல் எனவும்; ஒளவவன் முயலுமாறு, ஔவினித் தட்டுப்புடையல் எனவும்; அளபெடுத்தும் அளபெடாதும் வந்த வழியும், அப்பொருள் தோன்றியவாறு கண்டுகொள்க. இதனை இக்காலத்து ஓகாரமாக வழங்குப."

இதனால், குமரிநாட்டு வழக்குகள் மட்டுமன்றி, இற்றைத் தமிழ் நாட்டுப் பண்டை வழக்குகளும் பல இறந்தொழிந்தன என அறிந்துகொள்க.

வடவர், குமர+ஈசன்=குமரேசன், குல+உத்துங்கன்= குலோத்துங்கன் என்னும் புணர்ச்சிகளை யடிப்படையாகக் கொண்டு, ஏகார ஓகாரங்களையும் புணரொலிகளாகக் கொள்வர். அவை ஈகார ஊகாரத் திரிபுகளேயன்றிப் புணரொலிகளல்ல.