உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எகர ஒகர இயற்கை

129

இவ் வுரையைக் கண்டே நச்சினார்க்கினியரும் மயங்கினார் போலும்! இன்றுள்ளபடியே மகர வடிவம் முன்பும் இருந்தது. மகரங் குறுகும் போதே உட்புள்ளி பெறும். எ-டு: ம்.

மகரக் குறை வட்டத்திற்குள்ளேயும் ஒரு புள்ளியிருத்தல் காண்க.

கீழையாரியர் இந்தியாவிற்குட் புகுந்த காலம் தோரா. கி.மு. 2000. அவர்க்கன்று இலக்கியமும் இல்லை; எழுத்துமில்லை; தமிழரோ கி.மு. 10,000 ஆண்டுகட்குமுன் தலைக்கழகக் காலத்திலேயே முத்தமிழிலக்கிய விலக்கணங் கண்டவர். மேலும், உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூவகை யெழுத்துக் கொண்ட நெடுங்கணக்கு முதன்முதல் தமிழிலேயே தோன்றிற்று. இனி, சமற்கிருதத்திற்கு முந்திய வேதமொழி யுட்பட ஆரிய மொழிகட் கெல்லாம் தமிழ் முந்தியதும் மூலமுமான மொழியென்று, அதன் முச்சுட்டெழுத்துகளே முழுச்செவிடனுக்குங் கேட்குமாறு முழங்கிப் பறையறைகின்றன.

இனி, கிரந்த எழுத்தும் தேவநாகரியும் தமிழெழுத்தினின்றே திரிந்துள்ளன என்பது, ஊன்றி நோக்குவார்க்குப் புலனாகாமற் போகாது. இந்நிலையில், தமிழ் ஏகார ஓகார எழுத்துகளை வடமொழியினின்று கடன் கொண்ட தென்பது, பாட்டன் திருமணத்தைப் பேரனே நடத்தி வைத்தான் என்பது போன்றதே.

ஒரு மொழியிலுள்ள சொற்களினின்றே அம் மொழிக்குரிய எழுத்துகள் அமைக்கப்படும். அயன்மொழியிலுள்ள சிறப்பெழுத்துச் சொற்கள் கடன் கொள்ளப்படினும், அச் சொற்களேயன்றி அவற்றின் சிறப்பெழுத்துகள் முதற்கண் வழக்குப் பெறா. ஏகார ஓகார வடிவுகள் வடமொழியினின்று வந்தனவெனின், அவ் வீரெழுத்துகளையும். உயி வோ உயிர்மெய்க் கூட்டிலோ, முதலாகவோ இடையாகவோ கடையாக வோ கொண்ட சொற்கள் தமிழில் இல்லாதிருந்திருத்தல் வேண்டும்.

ராக

ஏ, ஏக்கம், ஏங்கு, ஏசு, ஏடாசி, ஏடு, ஏணி, ஏணை, ஏது (வினா), ஏந்து, ஏப்பம், ஏமா, ஏமாளி, ஏய், ஏர், ஏராளம், ஏரி, ஏல், ஏல, ஏலம், ஏவு, ஏழு, ஏழை, ஏற்பாடு, ஏற்றம், ஏற்று, ஏறு, ஏன் முதலிய ஏகார முதற்சொற்களும்;

ஓ, ஓக்காளம், ஓடு (பெயர்), ஓடு (வினை), ஓடி, ஓங்கு, ஓசை, ஓட்டம், ஓட்டு, ஓட்டி, ஓட்டை, ஓடம், ஓணான், ஓதம், ஓது, ஓமல், ஓய்தல், ஓர்படியாள், ஓரம், ஓரி, ஓலை, ஓவியம் முதலிய ஓகார முதற்சொற்களும்;

அவ் வீருயிரும் மெய்யோடுகூடி மூவிடத்தும் வரும் நூற்றுக் கணக்கான சொற்களும், கல்லா மக்களும் வழங்கும் அடிப்படை யுலக வழக்குச் சொற்களாயிருப்பதை நோக்கும்போது, தி.நா. சுப்பிரமணியனாரின் அறியாமை எத்துணை அளவற்றதென்று கண்டுகொள்க.

முதற்காலத்தில் மாந்தன் வாயில் முதற்கண் தோன்றிய நெடிலுயிர்கள் பின்னர்க் குறில்களாகக் குறுகிய பின்பே மொழி வளர்ச்சியடைந்திருப்பதால்,