உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130

இலக்கணக் கட்டுரைகள் எகர ஒகரக் குறில்களை இருவகையிலும் முதலிலும் மூவிடத்துங் கொண்ட இருவகை வழக்குச் சொற்களும், ஆயிரக்கணக்காகப் பெருகியுள்ளன. ஏகார ஓகார நெடிற்சொற்களினும், எகர ஒகரக் குறிற்சொற்கள் ஏறத்தாழ இருமடங்கு பெருகியிருப்பது கவனிக்கத் தக்கது.

ஆ ஈ ஊ என்னும் நெடில்களையும் அ இ உ என்னும் அவற்றின் குறில்களையும் அமைக்கத் தெரிந்த தமிழர்க்கு, ஏ ஓ என்னும் நெடில் களையும் அவற்றின் எ ஒ என்னும் குறில்களையும் அமைக்கத் தெரிய வில்லை யென்பது, முன் பிறந்த மும்மகவையும் வளர்த்த பெற்றோர்க்கு, பின்பிறந்த இருமகவை வளர்க்கத் தெரியாது போயிற்றென்பது போன்றதே.

தொல்காப்பிய முதலதிகார முதலியலாகிய நூன்மரபிலுள்ள 33 குறு நூற்பாவிற்குள்ளேயே, எகர ஏகார ஒகர ஓகாரச் சொற்கள் எங்ஙனம் என்பதைப் பின்வரும் நூற்பாக்களாலும்

இயல்பாக வந்துள்ளன

அடிகளாலும் உணர்ந்து கொள்ளலாம்.

எழுத்தெனப் படுப...........

முப்பஃ தென்ப

சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.

முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன.

அஇஉ எஒ என்னும்........

ஓரள பிசைக்குங் குற்றெழுத் தென்ப. ஆஈ ஊஏ ஐஓ ஒளஎனும் அப்பா லேழும்

ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப

மூவள பிசைத்தல் ஓரெழுத் தின்றே. நீட்டம் வேண்டின் அவ்வள புடைய கூட்டி எழூஉதல் என்மனார் புலவர். கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே. பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப. பதினெண் ணெழுத்தும் மெய்யென மொழிப. மெய்யோ டியையினும் உயிரியல் திரியாது. மெய்யின் அளபே அரையென மொழிப.

அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே.

(1)

(2)

(3)

(4)

(5)

(6)

(7)

(8)

(9)

(10)

(11)

(12)

அரையளபு குறுகல் மகரம் உடைத்தே

இசையிடன் அருகுந் தெரியுங் காலை.

(13)