உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எகர ஒகர இயற்கை

உட்பெறு புள்ளி யுருவா கும்மே.

மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல். எகர ஒகரத் தியற்கையும் அற்றே.

புள்ளி யில்லா எல்லா மெய்யும்

உருவுரு வாகி அகரமோ டுயிர்த்தலும்

ஏனை யுயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலும் ஆயீ ரியல வுயிர்த்த லாறே.

மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே.

வல்லெழுத் தென்ப கசட தபற.

மெல்லெழுத் தென்ப ஙஞண நமன.

இடையெழுத் தென்ப யரல வழள.

131

(14)

(15)

(16)

(17)

(18)

(19)

(20)

(21)

(22)

மெய்ம்மயக் குடனிலை தெரியுங் காலை. டறலள என்னும் புள்ளி முன்னர்க் கசப என்னும் மூவெழுத் துரிய. லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும். ஙஞணந மனவெனும் புள்ளி முன்னர் தத்தம் இசைகள் ஒத்தன நிலையே.

கசஞப மயவவ் வேழும் உரிய.

ஞநமவ என்னும் புள்ளி முன்னர் யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே. மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும். யரழ என்னும் புள்ளி முன்னர்

முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும். மெய்ந்நிலை சுட்டின் எல்லா வெழுத்தும் தம்முன் தாம்வரும் ரழஅலங் கடையே. ஆஏ ஓஅம் மூன்றும் வினாஅ.

அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்.

-

(23)

(24)

(25)

(26)

(27)

(28)

(29)

(30)

(32)

(33)

அகர ஆகார முதற்சொற்களும் இகர ஈகார முதற்சொற்களும் உகர ஊகார முதற்சொற்களும் போன்று அத்துணை ஏராளமாக இல்லாவிடினும், அவற்றிற்கு அடுத்தபடியாக எகர ஏகார முதற்சொற்களும் ஒகர ஓகார முதற்சொற்களும், நூற்றுக்கணக்கினவும் இயற்கையானவும் இன்றியமை யாதனவும் பிற்கால நூல்களிற் போன்றே தொல்காப்பியத்திலும் பயின்று