உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலக்கணவுரை வழுக்கள்

15

இனி, “பித்து பிச்சு, வைத்த – வைச்ச எனத் தகரத்துக்குச் சகரம் போலியாக வருதலும் அடங்கும் வழியறிந்து அமைத்துக்கொள்க” என்பது மேற்சூத்திர முடிவுரையாகும்.

பிச்சு, வைச்ச என்பவை செய்யுள் விகாரமேயன்றிப் போலியாகா. அவை போலியாயின் கொச்சை (Barbarism) யென்பதொன்றின்றிக் கல்லா மாக்கள் பேசுவதெல்லாம் போலியுளடங்கு மென்றும்,

66

ஆச்சென்றா லாயிரம் பாட்டா காதா'

ஆப்பிட்டுக்கொண் டடிபட்ட சொக்கேசருக் காசைப்பட்டு'

என்னும் செய்யுளடிகளிலுள்ள ‘ஆச்சு', ‘ஆப்பிட்டு’ என்பவும் உலக வழக்கில் திருந்திய மொழிகளாகுமென்றும் மறுக்க.

9. பதவியல்

நன்னூற் பதவிய லுரைமுகத்தில், "இவ் வியலுக்கு ஆதாரம் பெரும்பாலும் வடமொழியாதலால் அது தோன்ற 'மொழியியல்' எனப் பெயர் குறியாமல் ‘பதவியல்' எனப் பெயர் குறித்தார் போலும்” என்று ஆசிரியர் கருத்தை ஒருவாறு ஊடுருவி யறிந்தாற்போற் கூறப்பட்டுள்ளது.

தொல்காப்பியத்திற் பதவிய லென்றோர் இயலில் பகுபத உறுப்புக ளெல்லாம் தொகுத்துக் கூறப்படாவிடினும் எழுத்ததிகாரம் சொல்லதி காரமென்னு மீரதிகாரங்களிலும் ஆங்காங்கு வேறு வேறு கூறப்பட்டுள்ளன.

பகுதியும் விகுதியும் பெயரியல் வினையியல் இடையியல்களுள் ளும், சாரியையும் விகாரமும் புணரியல்களுள்ளும், இடைநிலையொன்றும் புணரியல் இடையியல்களுள்ளும் தொல்காப்பியத்திற் கூறப்பட்டுள்ளமை காண்க.

தொல்காப்பியக் காலத்து மக்கள் நுண்ணறிவினராதலின், அவர்க்குப் பலவியல்களுள்ளும் வேறு வேறு கூறப்பட்டுள்ள பகுபத வுறுப்புகளை மீண்டுமோரியலில் தொகுத்துக் கூற வேண்டாதாயிற்று. நன்னூற் காலத்தில் மக்களறிவு குறைந்தமையின் அவற்றைத் தொகுத்துக் கூறவும் வேண்டிய தாயிற்று. தொல்காப்பியத்திற் கூறப்படாத பகுபத விலக்கணத்தை வடமொழி தழுவிப் புதிதாய்ச் செய்தார் பவணந்தியாரெனின், அவர் காலம் வரையும் தமிழானது ஆங்கிலம்போலப் பதவியன் மொழியா யிருந்தில் தெனவும், அவரது நன்னூலாலேயே வடமொழிபோலப் பதவியன் மொழியாயிற்றெனவும் இயற்கைக்கும் மொழிநூலுக்கும் முரண்படுமன்றோ? ஆதலால் தொல்காப்பியர் காலத்திலேயே பகுபத விலக்கண மிருந்ததென் றும், அது தொல்காப்பியத்தில் ஆங்காங்குக் கூறப்பட்டுள்ளதென்றும், அதை மறுத்து மோரியலில் தொகுத்துக் கூறுவது அற்றை முறைப்படி கூறியது கூறலென்னும் குற்றமாகுமென்றும் உய்த்துணர்ந்து கொள்க.