உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

இலக்கணக் கட்டுரைகள் வழக்கின்கட் பயின்று நடவாத சொற்களைப் பயின்ற சொற்களோடு சேர்த்தி எ-று. பயிலாத சொல்லாவன: உறு, தவ, நனி. பயின்ற சொல்லாவன : மிகுதல், உட்கு, உயர்வு என்பன. சேர்த்துதலாவது இச்சொற்கள் இச்சொல்லின் பொருள்படும் எனக் கூட்டுதல். 'எச்சொல்லாயினும் பொருள்வேறு கிளத்தல்' என்பது யாதானும் ஒரு சொல்லாயினும் பொருள் வேறுபடுத்திக் எ-று' என்று தெய்வச்சிலையாரும் உரை கூறியுள்ளனர்.

காட்டுக

இதனால் உரிச்சொற்கள் வழக்கிற் பயிலாத சொற்களென்றும், அவை செய்யுட்கே யுரியவென்றும், அவற்றிற்கு இடம் நோக்கிப் பொருள்கொள்ள வேண்டுமென்றும், அவற்றுட் சில பகுதிப்பொருள் தராமற் பிறபொருள் தருமென்றும் அறிந்துகொள்க.

உரிச்சொல் செய்யுட் சொல் என்பது உறு, கெழு, மல்லல், அலமரல், மழவு, கதழ்வு, கெடவரல், தட, நிழத்தல், துவன்று, முரஞ்சல், பொற்பு, பணைத்தல், பையுள், தெவ், சும்மை, கழும், விழுமம், கமம், கவவு, இலம்பாடு, வியல், நாம்(அச்சம்), வய, துய, உசா, வயா, நொசிவு புனிறு, யாணர், யாணு, வை (கூர்மை), எறுழ் முதலிய உரிச்சொற்களைக் கண்ட வளவானே அல்லது கேட்ட வளவானே அறியப்படும்.

உரிச்சொற்கள் செய்யுட் சொற்கள் ஆனமைபற்றியே ஒவ்வோர் உரிச்சொல்லையும் தனித்தனி எடுத்துக் கூறிப் பொருள் கூறினர் ஆசிரியர். பெயர் வினை இடையென்ற மற்ற மூன்று சொற்கட்கும் இலக்கணம் மட்டுங் கூறியவர் உரிச்சொற்குத் தனித்தனி பொருள் கூறிச் செல்கின்றனர். அக்காலத்து அகராதி யின்மையால், செய்யுளில் வரும் அருஞ்சொற் கட்கெல்லாம் ஆசிரியரே பொருள் கூறவேண்டியதாயிற்று. நிகண்டு களெல்லாம் நெடுங்காலத்திற்குப் பிற்பட்டவையே. முதன்முத லெழுந்த நிகண்டு திவாகரம். பின்பு பிங்கலந்தை,சூடாமணி முதலிய நிகண்டுகள் தோன்றின. திவாகரத்தின் காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டு.

தொல்காப்பியத்தின் காலமோ கிறித்துவுக்குப் பன்னூற்றாண்டு முந்தியதாகும். தொல்காப்பியக் காலத்தைக் கி.மு. பத்தாம் நூற்றாண்டென் றும், நான்காம் நூற்றாண்டென்றும் பலரும் பலவாறாகக் கூறுவர். ஆயினும், கிறித்துவுக்கு முற்பட்ட தென்பது மட்டும் தேற்றமாகும்.

உரிச்சொல் செய்யுட்சொல் என்பதை அறிந்தே,

'பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி

ஒருகுணம் பலகுணந் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல்”

என விளங்கக் கூறினர் பவணந்தியார்.

(நன்.442)

உரி என்பது உரிமை. உரிச்சொல் என்பது ஒன்றற்குரிய சொல். எதற்குரிய சொல் என்பதுமட்டும் குறிப்பிற் கூறினரேயன்றி வெளிப்படை யாய்க் கூறிற்றிலர் தொல்காப்பியர். அதோடு 'ஒருசொற் பலபொருட்

"