உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உரிச்சொல் விளக்கம்

23

குரிமை', 'பலசொல் ஒருபொருட் குரிமை' என உரிச்சொல் லிலக்கணச் சூத்திரத்தில் பிற சொற்றொடர்களோடு உரி என்னும் சொல்லைப் புணர்த்தது, அதன் சிறப்புப் பொருள் குன்றிச் சிலர்க்குக் கவர்படு பொருள் நிலையாகத் தோன்றற்குக் காரணமாயிற்று. நன்னூலில் ‘செய்யுட் குரியன' என்னும் ஒரே சொற்றொடரில் உரி என்னும் சொல்லைப் புணர்த்து அதன் சிறப்புப் பொருள் தோன்றச் செய்தார் பவணந்தியார்.

இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி”

என்று தொல்காப்பியத்திலும்,

‘பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி”

(நன். 442)

என்று நன்னூலிலும் உரியென்னும் சொல்லைப் புணர்த்தாது உரிச்சொற் பொருட் பாகுபாடே அல்லது உரிச்சொல் நிலைக்களப் பாகுபாடே கூறியிருப்பதால், 'இசைகுறிப்புப் பண்பென்னும் பொருட்கு உரிய சொல் உரிச்சொல்' என்று சேனாவரையர் கூறுவது பொருந்தாது, 'ஒருசொற் பலபொருட் குரிமை', 'பலசொல் ஒருபொருட் குரிமை' என்று தொல் காப்பியர் உரியென்ற சொல்லைப் புணர்த்துக் கூறிய சொற்றொடர்களையும், ஒருகுணம் பலகுணந் தழுவி' என மாற்றிக் கூறினார் பவணந்தியார். இதனால் உரிச்சொல் செய்யுட்சொல்லே யென்பதை வெள்ளிடை மலைபோல் விளங்க வைத்தனர்.

தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களிற் கூறப்பட்ட உரியியலே செய்யு ளகராதிகளான நிகண்டுகட்குத் தோற்றுவாயாகும். செய்யுளிற் சிறப்பாக வழங்கிப் பொருள் விளங்காத அருஞ்சொற்களை யெல்லாம் தனித்தனி யெடுத்துப் பொருள் கூறினர் முன்னை யாசிரியர். மக்கட்கு அறிவாற்றலும் நினைவாற்றலும் குறைந்த பிற்காலத்தில் மிகப்பல செய்யுட் சொற்கட்குப் பொருள் கூறவேண்டி யிருந்ததினாலும், அவை யெல்லாவற்றையும் கூற ஓர் இலக்கண நூல் இடந்தராமையானும், அவற்றைக் கூறுதற்கென்றே நிகண்டு என்னும் சிறப்பு நூல் எழுந்தது. ஒரு மாணாக்கன் செய்யுள் வழக்கான சிறப்புச் சொற்களை யெல்லாம்

முன்னமே யறிந்தானாயின் பின்பு செய்யுள் நூல்களைக் கற்கும்போது பொருளுணர்ச்சி எளிதாயிருக்கும். இதனால் செய்யுட் சொற்களிற் பெரும்பாலானவற்றை மாணாக்கர் மனப்பாடம் செய்ய வைத்தனர் பண்டைக் கணக்காயர். இதே நோக்கத்துடன்தான் நிகண்டுகளும் எழுதப்பட்டன. மக்கட்கு இளமையில் நினைவாற்றல் மிக்கிருப்பதால் அதைப் பயன்படுத்தக் கருதியே மாணாக்கர்க்கு நிகண்டுகளை மனப்பாடஞ் செய்வித்தனர். நிகண்டுகள் நிறைவும் விளக்கமும் பற்ற வரவர நீண்டு வந்தன. திவாகரத்தினும் பிங்கலமும், பிங்கலத்தினும் சூடாமணியும் நீண்டிருத்தல் காண்க. நிகண்டுகள் செய்யுட் சொற்களைக் கூறுவனவே யன்றி உலகவழக்குச் சொற்களைக் கூறுவனவல்ல. இற்றைய அகராதிகளே இருவகை வழக்குச்