உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உரிச்சொல் விளக்கம்

25

கருவி என்னும் தொழிற்பெயர் உரிச்சொல்லாகித் தொகுதியை உணர்த்தும்; கரு என்னும் பகுதி கருத்தலையே உணர்த்தும்.

எய்யாமை என்னும் எதிர்மறைத் தொழிற்பெயர் உரிச்சொல்லாகி அறியாமையை உணர்த்தும்; எய்தல் என்னும் உடன்பாட்டு வினை அம்பு விடுத்தலையே உணர்த்தும். இதை,

'அறிதற் பொருட்டாய் எய்தலென்றானும், எய்த்தலென்றானும் சான்றோர் செய்யுட்கண் வாராமையின், எய்யாமை எதிர்மறை யன்மை யறிக' என்னும் சேனாவரைய ருரையானு மறிக.

உலக வழக்கினுள்ளும் உடன்பாட்டி லொன்றும் எதிர்மறையி லொன்றுமாக வெவ்வேறு பொருள்படும் வினைகளுள.

எ-டு: உடன்பாடு

எதிர்மறை

பொறுமை (patience) பொறாமை (jealousy) தொல்காப்பிய எழுத்ததிகார ஈற்றயற் சூத்திரத்தில், குறிப்பினும் பண்பினு மிசையினுந் தோன்றி நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவி”

(தொல். எழுத்து. 482)

என்றதனை வினைப்பகுதி யென்றும் உரிச்சொல்லென்றும் கூறினார் தெய்வச்சிலையார். நச்சினார்க்கினியரும் தம் உரையில், 'குறிப்பினானும் பண்பினானும் இசையினானும் பிறந்து, ஒருவழிப்பட வாராத சொற்றன்மை குறைந்த சொற்களாகிய உரிச்சொற்களும்' என்றே முற்கூறினாரேனும்,

ஆம்.

'கண் விண்ண விணைத்தது, விண் விணைத்தது, இவை குறிப்புரிச் சொல்; ஆடை வெள்ள விளர்த்தது, வெள்விளர்த்தது, இவை பண்புரிச்சொல்; கடல் ஒல்ல ஒலித்தது, ஒல்லொலித்தது, இவை இசையுரிச்சொல். 'ஒல்லொலி நீர் பாய்வதே போலுந் துறைவன்' என்றார் செய்யுட்கண்ணும். இவை உயிரீறாயும் புள்ளியீறாயும் நிற்றலின் ஒன்றன்கண் அடக்க லாகாமையின் நெறிப்பட வாரா என்றார். விண்ண விணைத்தது தெறிப்புத் தோன்றத் தெறித்ததென்றும், விண்விணைத்தது தெறிப்புத் தெறித்ததென்றும் ஏனையவற்றிற்கும் இவ்வாறே உணர்க. இங்ஙனம் நிற்றலிற் றன்மை குறைந்த சொல்லாயிற்று. “வினையே குறிப்பே” (சொல். 258) என்னுஞ் சூத்திரத்திற் கூறிய என என்பதனை இவற்றோடு கூட்டியவழி இடைச் சொல்லாதலின் விண்ணென விணைத்தது எனப் புணர்க்கப்படுமாறு உணர்க' என்று பிற்கூறியதிலிருந்து, சூத்திரத்திற் குறைச்சொற் கிளவி யெனக் குறித்தது இடைச்சொல்லே யென்றும், விண்ண, வெள்ள என்று குறையாய் நிற்றலின் குறைச்சொற் கிளவியெனப்பட்டதென்றும் அறிந்து கொள்ளலாம்.

தொல்காப்பியர் குறைச் சொற்கிளவி என்னும் பெயரால் வினைப் பகுதியையே குறித்திருப்பாராயின், எச்சவியலில், முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை என்னும் மூவகைக் குறைகளைக் குறிக்குமிடத்து,