உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

இலக்கணக் கட்டுரைகள்

“உரிச்சொன் மருங்கினு முரியவை யுரிய"

என்று கூறினார். இதற்குச் சேனாவரையர்,

'உரிச்சொல்லிடத்தும் வேறுபடுக்குஞ் சொல்லாதற்கும் உரியன உரியவாம்; எல்லாம் உரியவாகா என்றவாறு. எனவே, உரிச்சொல்லுள் வேறு படுத்தும் வேறுபடுக்கப்பட்டும் இருநிலைமையு முடையவாய் வருவனவே பெரும்பான்மை யென்பதாம்.

'வேறுபடுக்குஞ் சொல்லே யாவன உறு, தவ, நனி என்னுந் தொடக் கத்தன. இருநிலைமையுமுடையன குரு, கெழு, செல்லல், இன்னல் என்னுந் தொடக்கத்தன. உறுபொருள், தவப்பல, நனிசேய்த்து, ஏகல்லடுக்கம் என இவை ஒன்றை விசேடித்தல்லது வாராமையும், குருமணி, விளங்குகுரு, கேழ்கிளரகலம், செங்கேழ்; செல்லனோய், அருஞ்செல்லல், இன்னற் குறிப்பு, பெயரின்னல் என இவை ஒன்றனை விசேடித்தும் விசேடிக்கப்பட்டும் இருநிலைமையுமுடையவாய் வருமாறும், வழக்குஞ் செய்யுளு நோக்கிக் கண்டுகொள்க. குருவிளங்கிற்று; செல்லறீர் எனத் தாமே நின்று வினை கொள்வன, விசேடிக்கப்படுந் தன்மை யுடையவாதலின், விசேடிக் கப்படுஞ் சொல்லாம். பிறவும் விசேடித்தல்லது வாராதனவும், விசேடித்தும் விசேடி யாதும் வருவனவும், வழக்குஞ் செய்யுளு நோக்கியுணர்க' என்று உரை கூறினர்.

இதனால், உரிச்சொல் என்பது பெயராகவும் வினையாகவும், அவற்றிற்கு அடையாகவும் வருமென்றும், பெயருக்கு அடையாங்கால் குறிப்புப் பெயரெச்சம் போல்வதென்றும், வினைக்கு அடையாங்கால் குறிப்பு வினையெச்சம் போல்வதென்றும், பெயருரிச்சொல் வினையுரிச் சொல் என்னும் இரு வகையுள் அறிந்துகொள்க.

எல்லா வுரிச்சொல்லும் அடங்காவென்றும்

இதுகாறுங் கூறியவாற்றால் உரிச்சொல் என்பது செய்யுட் சொல்லே யென்றும், அதற்குப் பிறவாறு கூறுவதெல்லாம் போலியுரை யென்றும், உரிச்சொல் ஓர் இலக்கணவகைத் தனிச்சொல் லன்றென்றும், அது பிரயோகத்திற்கேற்ப இன்ன சொல்லென்று கூறப்படுமென்றும் தெற்றெனத் தெரிந்துகொள்க.

- “செந்தமிழ்ச் செல்வி" கடகம் 1935