உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உரிச்சொல் விளக்கம்

27

தொல்காப்பியர் தம் காலத்தில் உலகவழக்கில் வழங்காதனவாகக் குறிக்கின்ற பசப்பு, அதிர்வு, தீர்தல், பழுது, முழுது, செழுமை, சேர் முதலிய சொற்கள் இக்காலத்துப் பெருவழக்காக வழங்குகின்றன. தொல்காப்பியர் காலத்தில் இவை வழங்கியிருப்பின் இவற்றுக்குப் பொருள் கூறியிரார். இனித் தம் காலத்தில் புதிதாய் வழங்கினவாக அவர் கூறும் கடுவன், கோட்டான், தத்தை, பூசை முதலிய ஏழு சொற்களில்,கோட்டான், பூசை என்னுமிரண்டே இக்காலத்து வழங்குகின்றன. ஏனைய வழக்கிறந்தன. பூசை என்பது இக்காலத்துப் பூனை என வழங்குகின்றது.

ஆகையால், தொல்காப்பியர் கூறிய உரிச்சொற்க ளெல்லாம் அக்காலத்துச் செய்யுட் சொற்களா யிருந்தன வென்றும், அவற்றுட் சில இக்காலத்து உலக வழக்கில் வழங்குகின்றன வென்றும், அவை இக்காலத்து உரிச்சொல் லாகாவென்றும் அறிந்துகொள்க.

இனி, உரிச்சொல்லென்பது எல்லோர்க்கும் பொருள்விளங்காத செய்யுட் சொல்லாயின், திரிசொல் என்பதும் எல்லோர்க்கும் பொருள் விளங்காத செய்யுட் சொல்லாயிருத்தலின் உரிச்சொல்லாமோ வெனின், கூறுதும்:

இயற்சொல், திரிசொல் என்பன இயல்பாய்ப் பொருளுணர்த்தும் சொல், இயற்சொற் றன்மையினின்றுந் திரிந்து அரிதாய்ப் பொருளுணர்த்தும் சொல் எனப் பொதுவாய்க் கூறப்படினும், சொற்பொருள் நோக்கின் இயல்பான சொல்(Primitive word), இயல்பான சொல்லினின்றும் திரிந்த சொல்(Derivative) என்றே கூறற்கேற்றன. இது திரிசொற் சூத்திரத்திற்கு,

1. திரிசொல்லாவது உறுப்புத்திரிதலும் முழுவதும் திரிதலுமென இரு ரு வகைத்து. கிள்ளை, மஞ்ஞை என்ப உறுப்புத்திரிந்தன. விலங்கல், விண்டு என்பன முழுவதுந் திரிந்தன. திரிபுடைமையே திரிசொற்கிலக்கணமாதல் “சொல்லின் முடிவி னப்பொருண் முடித்தல் என்பதனாற் பெறவைத்தார்’ என்று சேனாவரையர் கூறிய உரையானும், இதையொட்டி நச்சினார்க்கினியர் கூறிய உரையானும் உணரப்படும்.

உரிச்சொல் செய்யுட் சொல்லாகவே யிருத்தலானும், ஓர் இலக்கண வகைச் சொல்லன்மையானும், பெயர், வினை, இடை என்னும் முச்சொல்லாயு மிருத்தலானும், பிரயோகம்பற்றியே இன்ன சொல்லெனக் கூறப்படுவதாகும். தொல்காப்பியர் எச்சவியலுள்,

இடைச்சொல்லெல்லாம் பிறிதோர் சொல்லை விசேடிக்கும் சொல்லே என்னும் பொருளில்,

இடைச்சொல் லெல்லாம், வேற்றுமைச் சொல்லே”

என்று சூத்திரித்து, இப் பொருளை உரிச்சொல்லும் ஒருபுடை தழுவும்படி அதையடுத்து,