உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொல்காப்பியர்,

6

நிகழ்கால வினை

“நிலனும் பொருளுங் காலமுங் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட அவ்வறு பொருட்கும் ஓரன்ன உரிமைய செய்யும் செய்த என்னுஞ் சொல்லே.'

99

(719)

என்னும் பெயரெச்ச வாய்பாட்டு நூற்பாவில், 'செய்கின்ற' ('செய்கிற') என்னும் நிகழ்காலப் பெயரெச்ச வாய்பாட்டைக் கூறாமையானும்; வினையெச்ச வாய்பாட்டு நூற்பாவில் அவர் முக்கால வினையெச்சங்களை யும் கூறியிருப்பினும், நிகழ்கால வினையெச்சத்தில் நிகழ்கால இடைநிலை (கின்று-கிறு) இயல்பாய் அமையாமையானும்;

"முந்நிலைக் காலமுந் தோன்றும் இயற்கை எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து

மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்'

99

(725)

என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு,

"மலைநிற்கும், ஞாயிறியங்கும்'

என்பன போன்றும்,

66

"மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி

அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி செய்வ தில்வழி நிகழுங் காலத்து

மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே'

என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு,

99

(727)

"தவஞ்செய்தான் சுவர்க்கம் புகும், தாயைக் கொன்றான் நிரயம் புகும்" என்பன போன்றும், எதிர்காலத்திற்குரிய 'செய்யும்' என்னும் முற்றையே உரையாசிரியன்மார் எடுத்துக்காட்டி வந்திருப்பதானும், 'செய்கின்றான் என்னும் வாய்பாட்டுச் சொல் உருத்தெரியாதவாறு திரிந்தன்றித் தொல் காப்பியத்தில் ஓரிடத்தும் வாராமையானும்; 'செய்கின்ற என்னும் வாய்பாட்டுச் சொல்லோ அங்ஙனந் திரிந்தேனும் அதன்கண் வாராமையானும்; இடையியலில் முக்கால இடைநிலைகளைக் குறிப்பிடு மிடத்து,