உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

இலக்கணக் கட்டுரைகள்

(தொல். 159)

(தொல். 400)

(தொல். 483)

(தொல். 718)

66

வல்லெழுத்து மிகுநவும் உறழா குநவும் "நெடியதன் இறுதி இயல்பா குநவும்" "கிளந்த வல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும்

"சொன்முறை முடியாது அடுக்குந வரினும் “புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதநவும் வினைசெயல் மருங்கிற் காலமொடு வருநவும் வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும் அசைநிலைக் கிளவி ஆகி வருநவும் இசைநிறைக் கிளவி ஆகி வருநவும் தத்தம் குறிப்பிற் பொருள்செய் குநவும்

ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவும்என்று

(தொல். 735)

66

'தத்தங் கிளவி அடுக்குந வரினும்

(தொல். 912)

“பெயர்நிலைக் கிளவியின் ஆஅ குநவும்

திசைநிலைக் கிளவியின் ஆஅ குநவும்

தொன்னெறி மொழிவயின்

அ குநவும்

(தொல். 932)

(தொல். 1021)

(தொல். 1171)

(தொல். 1452)

(தொல். 1456)

மெய்ந்நிலை மருங்கின் ஆஅ குநவும் மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும் “பாலறி மரபிற் பொருநர் கண்ணும்”

66

'அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும்’ "நினையுங் காலைக் கேட்குநர் அவரே” "சொல்லுந போலவும் கேட்குந போலவும்

இங்ஙனம், கின்றிடைநிலை பெற்ற நிகழ்கால வினையாலணையும் பெயர்களின், திரிந்த வடிவுகள் தொல்காப்பியத்திலேயே வந்திருக்க, ‘செய்கின்ற' என்னும் நிகழ்காலப் பெயரெச்ச வாய்பாட்டைத் தொல்காப்பியர் கூறாதது குன்றக் கூறலேயாம்.

'செய்யா' என்னும் வாய்பாட்டு இறந்தகால உடன்பாட்டு வினை யெச்சத்துடன், நிற்றல் இருத்தல் கிடத்தல் பற்றிய இறந்தகால எச்சமுற்றுகள் தொடர்ந்துவரும் தொடர்ச்சொற்களினின்று, 'ஆநின்று', 'ஆவிருந்து’, ஆ கிடந்து' என்னும் இடைப்பகுதிகளைச் செயற்கையாகப் பகுத்துக் கொண்டு, அவற்றையும் நிகழ்கால இடைநிலைகள் எனப் பிற்காலத்து ரையாசிரியரும் இலக்கணவாசிரியரும் கூறுவது பொருந்தாது. நிகழ்கால இடைநிலை ‘கின்று' எனும் ஒன்றே. 'கிறு' என்பது அதன் தொகுத்தலே.

- "செந்தமிழ்ச் செல்வி" மே 1953