உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7

படர்க்கை 'இ' விகுதி

தமிழிலுள்ள பெண்பால் விகுதிகளுள் ஒன்றான 'இ' என்பது ‘ஸ்திரி’ என்னும் வடசொற் சிதைவென்று, 1951 மார்ச்சில் வெளிவந்த மதுரைக் கல்லூரி ஆண்டு மலரில், அக் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர் திருவாளர் இரா. கிருஷ்ணமூர்த்தி (B.A., B.O.L., L.T.) அவர்கள் வரைந் துள்ளார்கள் என ஒரு தமிழன்பர் எழுதியுள்ளார். அது "புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி” யாயினும், அதனால் பலர் மயக்குண் டிருப்பதாகத் தெரிகின்றதனால், அதற்கு உடனே மறுப்பெழுதாவிடின்,

6

"பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மே"

என்பதற்கிணங்க, அது ஒருகால் எதிர்கால இலக்கண நூலிலும் இடம் பெறலாமென்று கண்டு, இம் மறுப்பை எழுதலானேன்.

மதுரைக் கல்லூரி யிதழில் இகர விகுதியைப் பற்றி வரையப்பட்டுள்ள பகுதி வருமாறு:

“தமிழில் பெண்பால் விகுதி”

7

என்பது தமிழில் பெண்பால் விகுதி என்று கூறப்படுகிறது. உண்மையில் பெண்பால் விகுதி ‘இ’ அல்ல. அது பெண்பால் விகுதியாயின் 'வில்லி', 'நாற்காலி' முதலியவற்றில் அப் பொருளில் வராதிருப்பதேன்? உண்மை என்னவென்றால், 'இ' என்பது 'ஸ்திரி' என்பதன் சிதைவு. பெரும்பாலும், 'த்தி,' 'ச்சி’, ‘ட்டி' என்பவையே பெண்பால் விகுதிகளாக வருகின்றன. இவை 'ஸ்திரி' என்பதன் மாறுபட்ட உருவங்கள் என்பது தெளிவு. முதலில் 'ஸ்திரி' என்பதே 'பெண்பால் விகுதியாக இருந்து பிறகு அது சிதைந்து 'த்தி', 'ச்சி', 'ட்டி' என்று மாறியிருக்க வேண்டும்.

எ-டு:

குற + ஸ்திரி = குறத்தி

=

வெள்ளான் + ஸ்திரி= வெள்ளாட்டி. வண்ணான் + ஸ்திரி = வண்ணாத்தி. பார்ப்பான் + ஸ்திரி= பார்ப்பாத்தி ராஜா + ஸ்திரி = ராஜாத்தி

புலை + ஸ்திரி = புலைச்சி.

வலை + ஸ்திரி= வலைச்சி

ஆய் + ஸ்திரி= ஆய்ச்சி.

பிராமண + ஸ்திரி= பிராமணத்தி, பறை + ஸ்திரி = பறைச்சி